இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக அந்த தொற்று விரைவில் பரவிவிடும் என்ற அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கூட்டமாக கூடுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
எனவே நாடு முழுவதும் உள்ள கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் உளூந்தூர்பேட்டை அருகேயுள்ள கூவாகம் கிராமத்தில், கூத்தாண்டவர் கோவில் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 16 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.
எனவே இந்த திருவிழாவில் கலந்துகொள்ள டில்லி, மும்பை , கோல்கட்டா, பெங்களூரு உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் திருநங்கைகள் கூடுவார்கள்.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாலும், கூட்டமாக மக்கள் கூடக்கூடாது என்பதாலும் வரும் 21ல் இருந்து மே 6 வரை நடைபெற இருந்த கூத்தாண்டவர் திருவிழா ரத்து செய்யப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முடிவு, சீர்மிகு காவல்துறை அதிகாரிகள் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக