Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 7 ஏப்ரல், 2020

கசிந்தது தகவல்கள்... புதிய ரியல்மி டிவி 43 இன்ச் டிவி.... விரைவில் சந்தையில் வருகை

கொரோனாவின் வேகம் ஒருபுறம் இருக்க தற்சமயம் ரியல்மி பிராண்டு தொலைகாட்சி தற்போது சந்தையில் களமிறங்க இருக்கிறது.

அந்த வகையில் புதிய ரியல்மி டிவி 43 இன்ச் அளவில் உருவாகி இருப்பதாக தற்போது  தகவல்கள்  வெளியாகி உள்ளன.  இந்திய தரத்திற்கான சான்றளிக்கும் பி.ஐ.எஸ். தளத்தில் ரியல்மி டிவி43 பெயரில் எல்இடி டிவி ஒன்று சான்று பெற்று இருக்கிறது. 

இது புதிய ரியல்மி டிவி 43 இன்ச் அளவில் உருவாகி வருவதை இந்நிறுவனம் உறுதி செய்து இருக்கிறது. இது மாடல் எண் JSC55LSQL என்ற பெயரில் உருவாகியிருக்கிறது. 

இந்த 55 இன்ச் டிவி புதிய ரியல்மி டிவி சீரிஸ் டாப் எண்ட் மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.  ரியல்மி டிவி சீரிஸ் சிறப்பம்சங்கள் அறியப்படவில்லை என்றாலும், இவற்றில்
  • அல்ட்ரா ஹெச்டி மாடல்கள் ஹெச்டிஆர் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. 
  • இத்துடன் இவை கஸ்டரம் யூசர் இன்டர்பேஸ் சார்ந்த ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளம் கொண்டிருக்கும் என தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக