ஊரடங்கால் நாடு திரும்ப முடியாமல் இந்தியாவில் தவித்து வரும் வெளிநாட்டவர்களின் விசா காலம் மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது போக்குவரத்தான விமான சேவை, ரயில் சேவை, பேருந்து சேவை ஆகியவை இயங்கவில்லை. இதனால் பலர் வெளிமாநிலங்களில், வெளிநாடுகளிலும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
அப்படி சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருபவர்களை பாதுகாக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது, வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்து, இங்கிருந்து விசா முடிந்தும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல், தவிக்கும் வெளிநாட்டவர்களின் விசா காலத்தை மே 3 வரை நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக