Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

சனி, 18 ஏப்ரல், 2020

திடீரென வயல்வெளியில் தரையிறக்கப்பட்ட இந்திய விமானப்படை விமானம்! காரணம் என்ன?

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்தில், இன்று அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களில் விமானப்படை வீரர்கள் வழக்கமான பயிற்சி மேற்கொண்டுள்ளனர். 

அப்போது ஒரு ஹெலிகாப்டரில் எதிர்பாராத்த விதமாக தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, இது தொடர்பாக கட்டுப்பாட்டு பேனலில் இருந்து எச்சரிக்கை வந்துள்ளது. 

உடனடியாக ஹெலிகாப்டரை புதாவர் கிராமத்தில் உள்ள வயல்வெளியில் அவசரமாக தரையிறக்கினர்.  இதில் பயணம் செய்த, இரண்டு பைலட்டுகளுக்கும் எந்த பாதிப்பும்  ஏற்படவில்லை.

இதையடுத்து, விமானப்படை அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டரை சோதனை செய்து, அதன்பின், விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்படும் என விமானப்படை தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக