அடித்தட்டு மக்களுக்கு உதவியாக இருக்கும் திட்டங்களை செயல்படுத்துங்கள். ஐடி போன்ற பெரு நிறுவனங்களுக்கு ஊரடங்கு விதியை தளர்த்த வேண்டாம் என பார்த்திபன் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. வரும் ஏப்ரல் 20ஆம் தேதி கட்டட தொழிலாளர்கள், பிளம்பிங், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக் வேலை செய்யபவர்கள் வேலைக்கு செல்லலாம் எனவும், குறிப்பிட்ட தொழிற்சாலைகள், கம்பெனிகள் பாதி ஆட்களை வைத்து இயக்கலாம் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதற்கு நடிகர் பார்த்திபன் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கோரிக்கை வைத்துள்ளார். அதாவது, ' தற்போதுள்ள ஊரடங்கை தளர்த்த வேண்டாம். வேண்டுமென்றால் அடித்தட்டு மக்களுக்கு உதவியாக இருக்கும் திட்டங்களை செயல்படுத்துங்கள். ஐடி போன்ற பெரு நிறுவனங்களுக்கு இந்த விதியை தளர்த்த வேண்டாம். ஏனென்றால் அங்கு 50 பேர் வேலைக்கு செல்கிறார்களா அல்லது 500 பேர் வேலைக்கு செல்கிறார்களா என கண்டறிவது கடினம்.
இன்னும் நாம் கொரோனா பரவுவதில்லை 3ம் கட்டத்திற்கு செல்லவில்லை. இந்த விதிகளை தளர்த்தி 3 கட்டத்திற்கு சென்றுவிட்டால், அமெரிக்காவை கூட காப்பாற்றி விடலாம் இந்தியாவை காப்பாற்றுவது கடினம். என கோரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக