Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 14 ஏப்ரல், 2020

4-ம் வீட்டில் சந்திரன் இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

சந்திரன் மனோகாரகனாகவும், ஒருவரின் கற்பனை சக்தியை அதிகரிப்பவரும், எண்ணம், செயல், சொல், புத்தியை சரியாக கொண்டு செல்பவராகவும் இருப்பார்.

ஜாதகத்தில் சந்திரன் சரியாக இருந்தால் எல்லாமே சரியாக இருக்கும். அதே நேரத்தில் ஜாதகத்தில் சந்திரன் நீசம் பெற்றோ, பலம் குறைந்தோ, பாவ கிரகங்களுடன் சேர்ந்தோ இருந்தால் பாதிப்பு ஏற்படும்.

சந்திரன் நீருக்கு அதிபதி. மழை, ஆறு, கடல், அணைக்கட்டுகள் போன்ற அனைத்து நீர் நிலைகளுக்கும் சந்திரன்தான் அதிபதி. பௌர்ணமி தினத்தன்று சந்திரனிலிருந்து வரும் ரேகைகளின் அழுத்தம் அதிகமாக இருப்பதால்தான் கடலில் கொந்தளிப்பு அதிகமாகவும், ஆறுகளில் நீரோட்டம் அதிகமாகவும் இருக்கும்.

ஜோதிடப்படி மாத்ரு காரகன் சந்திரன் ஆவார். கடற்பயணம், ரசனை, அறிவு, ஆனந்தம், புகழ், அழகு, நடுநிலைமை, சுகபோகம் இவற்றிற்கு காரகன் சந்திரனே!

4ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

👉 மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும்.

👉 பாசன வசதி உடையவர்கள்.

👉 பயணம் செல்வதை விரும்புவார்கள்.

👉 அழகிய தோற்றம் கொண்டவர்கள்.

👉 தாய்வழிச்சொத்து கிடைக்கும்.

👉 கொடை குணம் கொண்டவர்கள்.

👉 தாயின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள்.

👉 மற்றவர்களுக்கு வழிகாட்டும் திறமை உடையவர்கள்.

👉 அடிக்கடி இடமாற்றத்தை விரும்பக்கூடியவர்கள்.

👉 சிற்றின்பங்களில் அதிக விருப்பம் உடையவர்கள்.

👉 உறவினர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும்.

👉 நண்பர்களின் மூலம் முன்னேற்றம் உண்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக