Oppo நிறுவனம் அதன் Find X2 தொடரின் கீழ் மூன்றாவது ஸ்மார்ட்போனாக ஒரு லைட் மாடலை அறிமுகம் செய்யலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
இதன் வழியாக வரவுள்ள இந்த லைட் வெர்ஷன் ஆனது 5ஜி ஆதரவு கொண்டிருக்கும் என்பதை நம்மால் வெளிப்படையாக அறிய முடிகிறது.
அதோடு நில்லாமல், வெளியான லீக்ஸ் தகவலானது இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி மற்றும் சார்ஜிங் வேகம், சில இணைப்பு விருப்பங்கள், கேமரா விவரக்குறிப்புகள் மற்றும் தொலைபேசியின் விலை ஆகியவற்றையும் வெளிப்படுத்தி உள்ளது.
இருப்பினும் இந்த ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 லைட் பற்றிய எந்தவிதமான அதிகாரப்பூர்வ வார்த்தையும் இதுவரை வெளியாகவில்லை என்பதால், பின்வரும் விவரங்களை சிட்டிகை உப்பில் இருந்து கிள்ளிகொள்ளும் அளவு மட்டுமே எடுத்துக்கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம்.
ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 லைட் ஸ்மார்ட்போனின் (எதிர்பார்க்கப்படும்) விலை:
வின்ஃபியூச்சர் அறிக்கையின்படி, ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 லைட் ஆனது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.41,000 என்கிற விலைக்கு தொடங்கலாம். ஐரோப்பாவில் கருப்பு மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்களில் விற்கப்படலாம்.
ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 லைட்டின் (எதிர்பார்க்கப்படும்) அம்சங்கள்:
இந்த ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் அளவிலான (1,080x2,340 பிக்சல்கள்) AMOLED டிஸ்பிளே இருக்கும் என்று வின்ஃபியூச்சர் அறிக்கை கூறுகிறது. இது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 765 SoC மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதன் ஒருங்கிணைந்த ஸ்னாப்டிராகன் எக்ஸ் 52 மோடமுக்கு நன்றி, ஏனெனில் அது 5G-ஐ ஆதரிக்கிறது.
இருப்பினும், இந்த ஆதரவு ஐரோப்பா மாறுபாட்டுடன் மட்டுப்படுத்தப்படலாம். இந்த ஸ்மார்ட்போன் சிங்கிள் சிம் கார்டு ஸ்லாட் (நானோ) உடன் வரலாம் என்றும், விரிவாக்கக்கூடிய சேமிப்பிடம் இல்லாமல் வரலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது, இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது!
முந்தைய கசிவுகளிலிருந்து, ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 லைட் ஆனது அதன் பின்புறத்தில் க்வாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். அதில் 48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா இருக்கும் என்று ஒரு புதிய லீக்ஸ் தகவல் கூறுகிறது. மற்ற மூன்று கேமராக்களை பொறுத்தவரை 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவைகள் அடங்கும். முன்பக்கத்தை பொறுத்தவரை, 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா இருக்கலாம்.
மற்ற அம்சங்களை பொறுத்தவரை, ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 லைட்டில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு இருக்கும் என்று வின்ஃபியூச்சர் அறிக்கை கூறுகிறது. இது 30W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 4025mAh பேட்டரியுடன் வரக்கூடும்.
இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 லைட்டில் என்எப்சி, வைஃபை 6 ஆதரவு, 3.5 மிமீ ஹெட்ஜாக் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்றவைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 7.0 கொண்டு இயங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக