Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 6 ஏப்ரல், 2020

9ம் வீட்டில் சூரியன் இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

சூரியன் ஒரு ஸ்தாபனத்தை நிர்வகிப்பதற்கு காரணமானவர் என்பதால் ஜாதகத்தில் சூரியன் வலுப்பெற்று இருந்தால் மட்டுமே ஒருவரால் தலைமைப் பதவியில் இருக்க முடியும்.

தலைமை தாங்குதல், மனோதிடம், ஆளுமைத்திறன், நிர்வாகத்திறன், ஒருவருடைய தனித்தன்மை, அந்தஸ்தான உத்தியோகம், கம்பீரமான தோற்றம், சுய கௌரவம், அரசியல், அரசாங்கம், அதிகாரம் மற்றும் நமது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளுக்கு சூரியன் காரகம் ஆகும்.

அதாவது தலை, மூளை, இருதயம், முக்கிய எலும்புகள், உடலின் உஷ்ணம், காய்ச்சல், தலைவலி, கண்நோய், மஞ்சள் காமாலை நோய், மூளை காய்ச்சல், அதாவது ஒருவரின் விதியை நிர்ணிப்பது சூரியனே ஆகும்.

சூரியனிடம் இருந்து ஒளியை பெற்றே மற்ற கிரகங்கள் பிரதிபலிக்கின்றன. சூரியனிடம் இருந்து மற்ற கிரகங்கள் இருக்கும் தூரத்திற்கு ஏற்ப ஒளியளவு மாறுபடும்.

9-ம் வீட்டை பாக்கிய ஸ்தானம், பிதுர்ஸ்தானம் என்று கூறுவார்கள். ஒருவர் செய்த பூர்வ ஜென்ம புண்ணியங்கள், பாவங்கள், நீண்ட பயணம், தெய்வ தரிசனம் செய்தல், உயர்கல்வி, முன்பின் தெரியாதவர்கள் ஆகியவற்றை குறிப்பது இந்த வீடுதான்.

லக்னத்திற்கு 9-ம் இடத்தில் பரிதி எனப்படும் சூரியன் நின்றால் அந்த ஜாதகருக்கு செல்வம் கிடைக்கும்.

9 இல் சூரியன் நின்றால் என்ன பலன்?

👉 புத்திக்கூர்மை உடையவர்கள்.

👉 சுய முயற்சியால் செல்வம் சேரும்.

👉 தர்ம சிந்தனைகள் கொண்டவர்கள்.

👉 உறவினர்களுடன் விரோதம் ஏற்படும்.

👉 எதிர்பாராத வழிகளில் பொருள் சேரும்.

👉 செல்வாக்கு மற்றும் மதிப்பு அதிகரிக்கும்.

👉 புத்திரர்களின் மூலம் முன்னேற்றம் உண்டாகும்.

👉 பயணம் செய்வதில் அதிக ஆர்வம் இருக்கும்.

👉 கணிதத்தில் வல்லவராக இருக்கக்கூடியவர்கள்.

👉 வெற்றிகரமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

👉 தத்துவ ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்டவர்கள்.

👉 இசை துறையில் விருப்பம் உடையவர்கள்.

👉 மனைவியிடம் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும்.

👉 தந்தை வழி உறவுகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக