Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 24 ஏப்ரல், 2020

புதுக்கோட்டை: நிஜாம் பாக்கு ஆலைக்கு சீல்!

கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 21 நாள்கள் ஊரடங்கு ஏப்ரல் 14ஆம் தேதியுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 20ஆம் தேதிக்குப் பிறகு கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள ஊரகப் பகுதிகளில் சில தொழிற்சாலைகள் நிபந்தனைகளுடன் இயங்க அனுமதியளிக்கப்பட்டது. இருப்பினும் தமிழ்நாட்டில் ஊரடங்கில் எந்தவித தளர்வும் இருக்காது என அறிவிக்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்படுகிறதா என புதுக்கோட்டை மாவட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபானி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். புதுக்கோட்டையில் தடையை மீறி செயல்பட்டு வந்த 50 கடைகளுக்கு அவர் சீல் வைத்தார்.

புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் பகுதியில் நிஜாம் பாக்கு தடையை மீறி இயங்கிவருவதாக வருவாய் கோட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது. இதனால் அந்தப் பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்திய அவர் முந்நூறுக்கும் அதிகமானோரைக் கொண்டு இயங்கிவந்த ஆலைக்கு சீல் வைத்தார். ஆலையை நடத்த அனுமதி பெற்றிருப்பதாக நிறுவனத்தினர் கூறியும், இவ்வளவு அதிகமான மக்களைக் கொண்டு பணியாற்றுவதற்கும், தனி மனித இடைவெளி முறையாக கண்டுபிடிக்கவில்லை என்றும் கூறினார்.

தொழிலாளர்களை உடனடியாக வெளியேற்றிவிட்டு வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்துள்ளார்.

புதுக்கோட்டையில் கொரோனாவால் யாரும் பாதிக்கப்படாமல் இருந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் பாதிக்கப்பட்டார். அவர் தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக