>>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    சனி, 25 ஏப்ரல், 2020

    சோம்பேறிக் கழுதைக்கு கிடைத்த தண்டனை

    ஒரு பண்ணையில் ஆண் கழுதையும், பெண் கழுதையும் வளர்ந்து வந்தன. ஆண் கழுதை கடுமையாக உழைத்து பண்ணைக்குள் கொண்டு செல்ல வேண்டிய சரக்குகளை முதுகில் சுமந்து செல்லும். மாலையில் காய்ந்த புல்லை மேய்ந்து பசியாறும்.

     பெண் கழுதை எந்த வேலையும் பார்க்காமல் பசுமையாகக் கிடைக்கும் புல்லை சாப்பிட்டு விட்டு, தொழுவத்தில் தூங்கி விடும். இப்படியே வேலை பார்க்காமல் பொழுதை கழித்தது.

     ஒருநாள் உழைத்த களைப்புடன் சோர்வாக ஆண் கழுதை வந்தது. ஆண் கழுதையைப் பார்த்து பெண் கழுதை உன்னைப் பார்க்கவே பாவமாக இருக்கிறது! என கிண்டல் செய்தது. என்ன செய்வது உழைத்தால் தான் முதலாளி விடுவார்! என்றது ஆண் கழுதை. இதைக் கேட்டதும் பெண் கழுதை சிரித்தது.

     ஏன் சிரிக்கிறாய்?

     அதற்கு பெண் கழுதை பண்ணையாள் வந்து உன் கயிற்றினை அவிழ்த்து விட்டதும், உடனே நீ வேலை செய்யப் போய் விடுவாய். நான் போக மாட்டேன்! அப்படியே படுத்திருப்பேன். நான் எழவில்லை என்றதும் சாட்டையால் நான்கு அடி அடிப்பான். பிறகு என்னை விட்டு விட்டுச் சென்று விடுவான்! நீயும் அதுபோல சண்டித்தனம் செய்து விடு. உன்னையும் பண்ணையாள் விட்டுவிட்டுப் போய் விடுவான் என அறிவுரை வழங்கியது பெண் கழுதை.

     காலைப்பொழுது வேலைக்குச் செல்லும் நேரம் ஆனதும், பண்ணையாள் வந்தான். வழக்கம் போல் ஆண் கழுதையைப் பிடித்துக் கொண்டு செல்ல முயன்றான். ஆனால், ஆண் கழுதை படுத்துக்கொண்டு சண்டித்தனம் செய்தது. பண்ணையாள் சாட்டை எடுத்து அடித்தும் பார்த்தான். ஆண் கழுதை எழவில்லை.

     பண்ணையாள் முதலாளியிடம் சென்று, அய்யா! இந்த ஆண் கழுதை இன்று சண்டித்தனம் செய்கிறது! என்றான். சரி பரவாயில்லை. இன்னைக்கு ஆண் கழுதைக்கு ஓய்வு கொடுத்துவிடு. தினமும் நன்றாகச் சாப்பிட்டுக் கொழுத்து சும்மா இருக்கும், அந்தப் பெண் கழுதையை அடித்து இழுத்துப் போ! என்றார்.

     பண்ணையாளும் வந்து ஆண் கழுதை சாப்பிட பசும் புல்லை வைத்துவிட்டு பிறகு, பெண் கழுதையை இழுத்துச் சென்று வேலையில் ஈடுபடுத்தினான். கெட்டதை சொல்லிக்கொடுக்கப் போய் தன்னுடைய பிழைப்பே போய் விட்டது என்று வருந்தியது பெண் கழுதை.

    நீதி :


    சோம்பேறியாக இருத்தல் கூடாது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக