மூலவர் : மகா துர்க்கை
உற்சவர் : -
அம்மன்/தாயார் : துர்க்கை
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் : திண்டீஸ்வரம் (திண்டுக்கல்)
ஊர் : திண்டுக்கல்
மாவட்டம் : திண்டுக்கல்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
திருவிழா:
நவராத்திரி விழா, துர்காஷ்டமி பூஜை, மார்கழி திருவிளக்கு பூஜை, வெள்ளிதோறும் ராகுகால பூஜை, வளர்பிறை அஷ்டமி, பவுர்ணமி விளக்கு வழிபாடு.
தல சிறப்பு:
பொதுவாக அம்மன் கோயில்களில் அம்மனுக்கு எதிரில் சிம்ம வாகனம் அமைந்திருக்கும். ஆனால் இக்கோயிலில் அம்மன் சிம்ம வாகனத்தில் மீது அமர்ந்து அருள்பாலிப்பது சிறப்பு. மன அமைதி தரும் அம்மன், திண்டுக்கல் மாவட்டத்தில் துர்கைக்கென்று தனிக்கோயில் இங்கு மட்டுமே உண்டு. ராஜகோபுரத்தில் அஷ்ட துர்கைகள் உள்ளன.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். மற்றும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ராகு காலங்கள்.
முகவரி:
அருள்மிகு மகா துர்க்கை திருக்கோயில் வேதாத்திரி நகர், திண்டுக்கல்-624004
போன்:
+91 451-2461462, 98942-45330
பொது தகவல்:
வெள்ளி-10.30-12 இராகு கால சிறப்பு பூஜை, வளர்பிறை அஷ்டமி, பௌர்ணமி விளக்கு பூஜை இங்கு சிறப்பாக நடைபெறும்.
திண்டுக்கல் வேதாத்திரி நகர் அறிவுத்திருக்கோயில் எதிரே வடக்குபுறம் பார்த்து மகா துர்கை கோயில் அமைந்துள்ளது. கோயிலில் அம்மனுக்கு முன்புறம் ஆழ்வார் விநாயகரும், ஆஞ்சநேயரும் உள்ளனர். உள் மண்டபத்தில் நவகிரகங்கள் உள்ளன. ஆன்மிக பெரியோறை போற்றும் வகையில் ராமகிருஷ்ண பரமஹம்சர், அமிர்தானந்தமாயி போன்றோரின் உருவ படங்கள் இங்கு வைக்கப்பட்டு வழிபடப்படுகிறது.
பிரார்த்தனை
நாகதோஷம் விலக, திருமணத்தடை நீங்க, புத்திரபாக்கியம் பெற, சத்ரு பயம் நீங்க, காரியம் சித்தி பெற இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.
நேர்த்திக்கடன்:
எலுமிச்சை மாலை/விளக்கு, சிவப்புப்பட்டு/ செவ்வரலி மாலை, கண்ணாடிவளையல் சாத்துதல் நேர்த்திக்கடனாக செலுத்தப்படுகிறது.
தலபெருமை:
இக்கோயில் தமிழ்முறைப்படி வடிவமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
தல வரலாறு:
புராண இதிகாச காலங்களில் இருந்து துர்க்கா வழிபாடு போற்றப்படுகிறது. துர்க்கா என்றால் கோட்டை அரண் என்று பொருள். துர்க்கை அரண் போல் நின்று தீய குணங்கள் என்ற பகைவர்கள் நம் உள்ளத்தில் புகாமல் காப்பதால் பராசக்தியை துர்க்கை என்கிறோம். திண்டுக்கல் வேதாத்திரி நகரில் சிம்மத்தின் மீது அமர்ந்து தன் வலது பாதத்தை பத்மத்தின் மீது பதித்து பின் இரு கரங்ககளில் சங்கு, சக்கரம் விளங்கவும் முன்கரங்கள் அபய, வரத முத்திரைகளோடு அருளாட்சி செய்கிறார். இங்குள்ள துர்க்கை வீரமகள் வெற்றியின் சின்னமாக திண்டுக்கல் மக்களின் மனதில் இடம் பெற்றுள்ளார். இவர் மீது நம்பிக்கை கொண்டு பக்தி செய்கிறார்களோ அவர்கள் இகபர சுகங்களை அடைவது திண்ணம்.
சக்தி கொண்ட துர்கை, வேதாத்திரி நகரில் அமைக்க வேண்டும் என இக்கோயில் அறங்காவலர்கள் முடிவு செய்தனர். இதற்காக மகாபலிபுரத்தில் 6 அடி உயர துர்கை அம்மன் சிலை வடிவமைக்கப்பட்டது. இந்தியாவின் முக்கிய ஸ்தலங்களில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டிலிருந்து வடக்கே 3 கி.மீ., தூரத்தில் உள்ளது. திண்டுக்கல் (டவுன்பஸ் 5) வேதாத்திரி நகர் ரோட்டில் எம்.வி.எம் கல்லூரி பஸ் ஸ்டாப்பில் இறங்கி ஆட்டோவில் செல்லலாம். திண்டுக்கல் (திருச்சி-பழநி) நான்கு வழி சாலை இ.பி காலனி வழியாகவும் செல்லலாம்.
அருள்தரும் ஆலயங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக