Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 7 ஏப்ரல், 2020

பாண்டவர்களின் தூது...!

கிருஷ்ணர், துரியோதனன் வஞ்சனையால் பாண்டவர்களிடம் இருந்து நாட்டை கவர்ந்தது மட்டுமல்லாமல் நிபந்தனைகளையும் விதித்தான். துரியோதனன் விதித்த நிபந்தனைகளை பாண்டவர்கள் நிறைவேற்றிவிட்டனர். 

கிருஷ்ணர்! துரியோதனனின் கருத்தை அறிந்து வர ஒரு தூதுவனை அனுப்பி, நாட்டில் பாதியைப் பாண்டவருக்குத் தர கூற வேண்டும் என்றார். கிருஷ்ணரின் திட்டத்தை பலராமர் ஏற்கவில்லை. சூதாட்டத்தில் தோற்ற நாட்டை திரும்பவும் தருமாறு வற்புறுத்துவது நியாயமில்லை. 

துரியோதனன் கொடுத்தால் பெற்று கொள்ளலாம். ஆனால் நாட்டில் பாதி வேண்டும் என்பதற்காக போர் புரியக்கூடாது என்றார்.

பலராமரின் கருத்துக்கள் ஏற்புடையதாக இல்லை என்று கிருஷ்ணரும், பாண்டவர்களும் கருதினர். நாம் நாட்டில் பாதியை பெறவேண்டுமெனில், பலநாட்டு மன்னர்களின் உதவியை பெற வேண்டும். 

முதலில் கேட்பவர்க்கே உதவுதல் என்பது மன்னரின் இயல்பாகும். ஆகவே உடனே செயல்பட வேண்டும். துரியோதனனிடம் செல்லும் தூதுவன் திறமை வாய்ந்தவனாய் இருக்க வேண்டும் என்றார் துருபதன்.

முதலில் நாம் துரியோதனனின் நோக்கம் என்ன என்பதை தெளிவாக அறிந்துக் கொள்ள வேண்டும். அதற்கு யாரையாவது அவனிடம் தூது அனுப்ப வேண்டும். கிருஷ்ணர், உலூகன் ஒருவனே தூது செல்வதற்கு தகுதியானவன். 

அவனையே தூது செல்ல அனுப்பலாம் எனக் கூறினார். உலூகன், கிருஷ்ணரின் வேண்டுகோளுக்கு இணங்க, துரியோதனனிடம் தூது சொல்ல அஸ்தினாபுரம் நோக்கிச் சென்றான். அதன் பிறகு கிருன்ணர் பாண்டவர்களிடம் இருந்து விடைப்பெற்று துவாரகைக்குச் சென்றார்.

அஸ்தினாபுரம் சென்ற உலூகனை, துரியோதனன், விதுரர் முதலானோர் மிகுந்த மரியாதையுடன் அழைத்து உபசரிப்பு அளித்தனர். அதன் பிறகு துரியோதனன் உலூகனிடம், தாங்கள் முக்கியமான செய்தி கொண்டு வந்திருப்பது போல தெரிகிறதே எனக் கூறினான். 

ஆம், கொண்டு வந்துள்ளேன். அது தாங்கள் தெரிந்து கொள்வது அவசியம் என்றான்.

நான் கொண்டு வந்த செய்தியை தங்களிடம் கூறி அதற்கான மறுமொழியை தெரிந்துக் கொள்ளவே வந்துள்ளேன். நான் இங்கு பாண்டவர்களின் தூதுவனாக வந்துள்ளேன். 

பாண்டவர்கள் தங்களின் நிபந்தனைப்படி பன்னிரண்டு வருட வனவாச காலத்தையும், ஒரு வருட அஞ்ஞான வாசத்தையும் வெற்றியுடன் முடித்து விட்டனர். 

அவர்களுக்கு கொடுக்க வேண்டிய நாடு நகரங்களை தாங்கள் திருப்பி கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்க முன் வரவில்லையென்றால் அவர்கள் சூதாட்ட மூலமும் அல்லது போர் மூலமும் பெற்றுக் கொள்ள தயாராக உள்ளார்கள். 

இதில் தங்களுக்கு உகந்த வழியை தேர்ந்தெடுக்கும்படி அவர்கள் கூறி அனுப்பி உள்ளனர் என்றான்.

இதைக் கேட்டு துரியோதனன் பலமாக சிரித்தான். அந்த பாண்டவர்கள் நாடு நகரங்கள் திரும்பக் கேட்டு தங்களை தூதுவனாக அனுப்பி உள்ளார்கள். என்னுடைய பதிலை அந்த பாண்டவர்களிடம் தெளிவாகச் சென்று கூறுங்கள். 

என்னால் நாடு நகரங்களை பாண்டவர்களுக்கு கொடுக்க முடியாது. அவர்களால் போரிட்டு நாடு நகரங்களை மீட்டுக் கொள்ள முடியும் என்றால் அவ்வாறே செய்யட்டும் என்றான். உலூகன், துரியோதனா! பாண்டவர்களின் வலிமையைப் பற்றி நன்றாக உனக்கு தெரிந்திருக்க கூடும்.

 அதனால் சிந்தித்து செயல்படு என்றான். ஆனால் துரியோதனன், உலூகன் சொல்லை செவிக் கொடுத்து கேட்கவில்லை. இது தான் என்னுடைய பதில். சென்று அந்த பாண்டவர்களிடம் கூறுங்கள் என்றான்.

அப்பொழுது விதுரர், துரியோதனா! பாண்டவர்களுக்கு சேர வேண்டிய நாடு நகரங்களை திருப்பிக் கொடுத்து விடு. இது தான் உனக்கு நன்மை. அர்ஜூனனின் வில் திறமைப் பற்றி அனைவரும் அறிந்ததே. 

அதனால் பாண்டவர்களை எதிர்த்து வெற்றி பெறுவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. பாண்டவர்களுக்கு உறுதுணையாக கிருஷ்ணர் இருக்கிறார் என்பதை மனதில் கொள். போரினால் பலவற்றை இழக்க நேரிடும் என்றான். 

துரோணரும், பீஷ்மரும், கிருபாச்சாரியாரும் போர் வேண்டாம் என்றே கூறினர். ஆனால் துரியோதனன் இவர்களின் அறிவுரையை சிறிதும் கேட்கவில்லை.

துரியோதனன், என் பக்கம் கர்ணன் இருக்கும் வரை என்னை யாரும் வீழ்த்த முடியாது என்று தற்பெருமை கொண்டு கூறினான். 

அதன் பின் உலூமன், துரியோதனா! உனது முடிவு இது தானா? எனக் கேட்டான். துரியோதனன், என்னால் சிறு அளவு பங்கும் பாண்டவர்களுக்கு கொடுக்க முடியாது என்பதை தெளிவாக கூறுங்கள் என்றான். 

அதன் பிறகு உலூமன் அனைவரிடத்திலும் இருந்து விடைப்பெற்று பாண்டவர்களை நோக்கிச் சென்றான்.

பாண்டவர்களிடம், துரியோதனன் கூறிதைக் கூறினான். தருமர், உலூகா! நீ கொண்டு வந்த செய்தியை கிருஷ்ணரிடம் சென்று தெரிவிப்பாயாக எனக் கூறி அனுப்பினான். 

உலூகன் துவாரகைக்கு சென்று, கிருஷ்ணரிடம், துரியோதனன் கூறிய பதிலை தெரிவித்தார். அதன் பின் கிருஷ்ணர் ஆழ்ந்த சிந்தனையில் போர் உறுதியாகிவிட்டது என நினைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக