சுவையான அவரைக்காய் குழம்பு செய்யும் முறை.
நாம் தினமும் காய்கறிகளை வைத்து, பலவிதமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சிசுவையான அவரைக்காய் குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- அவரைக்காய் - கால் கிலோ
- பெரிய வெங்காயம் - 2
- தக்காளி - 3
- பச்சை மிளகாய் - 2
- மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
- புளி - எலுமிச்சை அளவு
- கறிவேப்பிலை - 1 கொத்து
- பூண்டு பல் - 10
- கடுகு - அரை டீஸ்பூன்
- எண்ணெய் - தேவைக்கேற்ப
- உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் எலுமிச்சை அளவு புளியை அரை கப் தண்ணீரில் சற்று கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாஅத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கிய பிறகு, அவரைக்காயை போட்டு நன்கு வதக்க வேண்டும்.
பின் தக்காளியை போட்டு மேலும் வதக்க வேண்டும். மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு போட வேண்டும். பின் கெட்டியாக கரைத்து வாய்த்துள்ள புளியை குழம்பில் ஊற்ற வேண்டும். காய் நன்கு வெந்தவுடன் குழம்பை இறக்கி பரிமாற்ற வேண்டும். இப்பொது சுவையான அவரைக்காய் குழம்பு தயார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக