ஒரு ஊருல ரமேஷ், சுரேஷ் அண்ணன், தம்பிகள் இருந்தாங்க. அவங்க ரெண்டு பேரும் மீன் பிடிச்சு வாழ்க்கை நடத்துனாங்க. ஒரு நாள் மதியம் அவங்க சாப்பிட்டுக்கிட்டு இருக்கும்போது பிச்சைக்காரன் ஒருத்தன் அங்கே வந்தான். எலும்பும் தோலுமாக இருந்த அவனைப் பார்க்கவே பரிதாபமாக இருந்துச்சாம்.
அந்த பிச்சைக்காரன் அவங்ககிட்ட சாப்பிட்டு நாலு நாளாச்சு. பசிக்குது... எதாவது தாங்கன்னு கேட்டான். ரமேஷ அவனுக்கு கொஞ்சம் சாப்பாட்டை எடுத்து தந்தான்., இதை பார்த்த சுரேஷ., அண்ணா! இதுப்போல சோம்பேறிங்ககிட்ட இரக்கம் காட்டாதனு, தடுத்தான்.
அதை கேக்காம ரமேஷ சாப்பாட்டை குடுத்தான். அடுத்த நாளும் அதே போல சாப்பிடுற நேரத்துல பிச்சைக்காரன் வந்தான். திரும்பவும் வந்ததுனால சுரேஷக்கு கோவம் வந்து டேய்! சோம்பேறி பையா! அடுத்த முறை உன்னை இங்க பார்த்தா தொலைச்சுடுவேன்னு கத்தினான். மூணாவது நாளும் பிச்சை கேட்டு அங்க வந்தான். அவனப்பாத்த கோபத்துல சுரேஷ அங்கிருந்த தூண்டில் ஒன்றை எடுத்துக்கிட்டு அவனைத் ஏரிக்கரைக்கு கூட்டி வந்தான்.
இப்படி பிச்சை எடுக்குறியே! இதெல்லாம் ஒரு பிழைப்பா? உனக்கு மீன் பிடிக்க கத்துத்தரேன். இந்த தூண்டிலை வச்சு பொழைச்சுக்கோன்னு சொல்லி மீன் பிடிக்குறது எப்படின்னு கத்துக்கொடுத்திட்டு போய்ட்டான்.
பல நாளாக அந்த பிச்சைக்காரன் வரவே இல்ல. அவனை மறந்து போய்ட்டாங்க. ஒரு நாள் ரமேசும், சுரேசும் டிவி பார்த்துக்கிட்டு இருந்தப்போ, ஒரு அழகான குதிரை வண்டில ஒருத்தர் வந்தார். அவர் கையில தங்கத்தால் செஞ்ச தூண்டில் ஒண்ணு இருந்துச்சு. ரமேசும், சுரேசும் அவரைப் பார்த்தாங்க. தங்கத் தூண்டிலை எனது பரிசாக வச்சுக்கோனு சுரேஷிடம் குடுத்தாரு.
தன் வீட்டுக்கு வந்த பிச்சைக்காரன்தான் இவன் என்று ரமேஷக்கு தெரிஞ்சுது. அவனுக்கு சரியான கோவம். நீ சாகப் பிழைக்க இருந்தப்போ உனக்கு சாப்பாடு குடுத்து காப்பாத்தியது நான். எனக்குத்தான் இந்தத் தங்கத் தூண்டிலை தரனும். எனக்குத் தா என்று கத்தினான். ஆனால், அவரோ, இது உங்க தம்பிக்குத்தான் சேரனும்ன்னு சொன்னார். இதை ரமேஷ கேட்காம வழக்கை கோர்டுக்கு கொண்டு போனான். நடந்ததை எல்லாம் விசாரிச்சார் ஜட்ஜ்.
ரமேஷயை பார்த்து, நீ இவருக்கு சாப்பாடு குடுத்து உயிரை காப்பாத்தியது உண்மைதான். ஆனா, உன் தம்பியோ இவர் வாழ்வதற்கு வழி காட்டினார். அதைப் பயன்படுத்தி இவர் பெரிய பணக்காரராயிட்டார். நிலையான உதவி செய்த சுரேஷக்கு இவர் தூண்டிலை பரிசா குடுத்தது சரிதான். இந்தத் தங்கத் தூண்டில் சுரேஷக்குத்தான்னு தீர்ப்பு! வழங்கப்பட்டது.
நீதி :
நாம் செய்யும் உதவி அப்போதைக்கு கஷடம் தீர்ந்தால் மட்டும் போதாது, எப்போதும் கஷடம் வராதபடி உதவி செய்தல் வேண்டும்.
குட்டிக்கதைகளும் - கட்டுரைத்தொடர்களும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக