உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது , இந்த நிலையில் நடிகர் அஜித்குமார் தற்பொழுது வலிமை படத்தில் நடித்து வருகிறார் படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் அஜித்குமார் கொரோனா தடுப்பு பணிக்காக பிரதமர் மற்றும் முதலமைச்சர் பெப்சி தொழிலாளர்களுக்கு தன்னால் இயன்ற நிதி உதவியை அளித்தார் இந்த நிலையில் வருகின்ற மே 1ம் தேதி உழைப்பாளர் தினத்தன்று நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாள் வருகிறது .
இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட தயாராக இருந்தனர் வருடம் தோறும் அவரது பிறந்த நாள் அன்று ஏழைகளுக்கு சாப்பாடு வழங்கி ட்விட்டரில் அவரது பெயரை ஹேஸ்டேக் செய்து ட்ரெண்ட் செய்து வருவது உண்டு ,அந்த வகையில் இதற்கு அஜித் தரப்பில் இருந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதை ஆதவ் கண்ணதாசன் மற்றும் நடிகர் சாந்தனு ஆகியோர் தங்களது ட்வீட்டர் பக்கத்தில் அஜித்குமார் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது அதில் தனது பிறந்தநாளில் பொதுமுகப்பு படங்களை சமூக வலைதளங்களில் வைப்பது மற்றும் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் எதையும் செய்ய வேண்டாம் என்று அஜித் கூறியுள்ளதாகவும் அந்த பதிவில் கூறப்பட்டிருந்தது.
மேலும் அஜித் கணிவோடு விடுத்த வேண்டுகோளை ஏற்போம் அவரது வார்த்தைக்கு மதிப்பு கொடுப்போம் என்றும் பதிவிட்டிருந்தனர், மேலும் கொரோனா பாதிப்பால் மக்கள் கஷ்டப்படும் இந்த நேரத்தில் தனது பிறந்த நாளை யாரும் கொண்டாட வேண்டாம் என்று அஜித்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்
பொழுதுபோக்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக