>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 9 ஏப்ரல், 2020

    எதிர்மறை சிந்தனையை எப்படி விரட்டுவது?

    சிந்தனைதான் நம் அன்றாடச் செயல்பாட்டுக்கு அடிப்படையாக அமைகிறது. ஒருவருக்கு வாழ்வில் எதாவது ஒரு சூழலில் எதிர்மறை எண்ணங்களை வந்தே தீரும். எதிர்மறை எண்ணம் நமது முன்னேற்றத்திற்கு மாபெரும் எதிரி.

    எதிர்மறை சிந்தனை அதிகம் இருந்தால் அதற்கேற்பவும், ஆக்கபூர்வ சிந்தனைகள் இருந்தால் அதற்கேற்பவும் நம் செயல்பாடுகளும், முன்னேற்றமும் அமைகின்றன. இங்கு ஒரு சிறுகதை மூலம் எதிர்மறையான சிந்தனைகளை எவ்வாறு விரட்டுவது என்பதை பற்றி பார்ப்போம்.

    அது ஒரு மலை பிரதேசம். ஒரு இளம் ஜோடி ஒன்று பேருந்தில் சென்று கொண்டிருந்தார்கள். அந்த பேருந்து வளிந்து நெளிந்த பாதைகளில் சென்று கொண்டிருந்தது. திடீரென்று அந்த இளம் ஜோடியினர் பேருந்தில் இருந்து இறங்க முடிவு செய்தனர். அந்த இளம் ஜோடியினர் பேருந்தை நிறுத்தி இறங்கிக் கொண்டனர்.

    அவர்கள் இறங்கிய அந்த வனப்பகுதியில் குயில்களும், மயில்களும், பறவைகளும் ஆடிப் பாடி விளையாடிக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த இளம் ஜோடிக்கு இந்த சுற்றுச்சுழல் மகிழ்ச்சியை தரவில்லை. இருவரும் மலைமீது இருந்த பாறையில் ஏறி நின்றனர். அந்த மலை உச்சியில் இருந்து கீழே பார்த்தபோது அவர்களின் கைகால்கள் நடுங்கியது. அவர்களின் உடலும் ஒருவாறு நடுங்க ஆரம்பித்தது.

    பின் இருவரும் கண்களை மூடிக் கொண்டு தங்கள் கரங்களை பற்றிக் கொண்டனர். திடீரென்று மிகப்பெரிய சத்தம் கேட்டது. அச்சத்தத்தை கேட்டு அங்கிருந்த விலங்குகளும், பறவைகளும் அலறி அடித்து ஓடின. அந்த இளம் ஜோடியினர் சத்தத்தை நோக்கிச் சென்றனர். வெகு தூரத்தில் அவர்கள் வந்த பேருந்தின் மீது பெரிய பாறை விழுந்து பேருந்து நசுங்கி இருந்தது. இப்பேருந்து விபத்தில் இருந்து ஒருவரும் தப்ப முடியவில்லை. அனைவரும் அப்பாறைக்கு இரையாயினர். அந்த நேரத்தில், அப்பகுதியில் நிசப்தம் மட்டும் நிலவியது.

    அந்த இளம் ஜோடியினர் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். இருவருமே நாம் அந்த பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக்கூடாது என கூறினர். அவர்கள் ஏன் அவ்வாறு கூறினார்கள் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா?

    அந்த இளம் ஜோடியினர் அப்பேருந்தில் இறங்காமல் இருந்திருந்தால், சில நிமிடங்களுக்கு முன்னரே பேருந்து அந்த இடத்தைக் கடந்திருக்கும். பாறை விழும் பேராபத்தில் இருந்து அனைவரும் தப்பி இருப்பார்கள்.

    தத்துவம் :

    எதிர்மறையான சிந்தனை நமக்கு தோன்றினால், நாம் நேர்மறையாக சிந்திக்க கற்றுக்கொள்ள வேண்டும். எதிர்மறைவான சிந்தனையை தகர்த்து ஆக்கபூர்வ எண்ணங்களை வளர்த்திடுவோம்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக