Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

சனி, 18 ஏப்ரல், 2020

விளையாட்டு போட்டிகளை நடத்தினால் மட்டுமே இழந்த பொருளாதரத்தை மீட்க முடியும்- அமெரிக்க அதிபர் டிரம்ப்

விளையாட்டு போட்டிகளை நடத்தினால் மட்டுமே இழந்த பொருளாதரத்தை மீட்க முடியும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசால் அமெரிக்காவில் உயிரிழப்பும், பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனா வைரசால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளை சந்தித்து இருக்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,44,417 ஆக உள்ளது. 

இந்நிலையில் இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகையில்,விளையாட்டு போட்டிகளை நடத்தினால் மட்டுமே இழந்த பொருளாதரத்தை மீட்க முடியும்.மேலும் மீண்டும் விளையாட்டு போட்டிகளை காண ஆர்வமுடன் இருக்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக