Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 24 ஏப்ரல், 2020

வாழ்க்கைக்கு பணம் மட்டும் போதுமா?

வேலை, பணம், மகிழ்ச்சி, அன்பு அனைத்தும் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்று. வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ பணம் தேவை. ஆனால் பணத்தின் மேல் மட்டும் குறிக்கோளாக இருந்து வாழ்க்கையை இழந்துவிடக் கூடாது. பணத்தை கொண்டு மகிழ்ச்சி, அன்பு இவற்றை பெற வேண்டுமே தவிற வாழ்க்கையை இழக்க கூடாது.

இங்கு ஒருவர் தன் வாழ்நாள் முழுவதும் கடுமையாக உழைத்து பணத்தை சேமித்தார். அதைக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தாரா? இல்லையா? என்பதை வாருங்கள் தெரிந்துக் கொள்வோம்.

சுவாமி மலை என்னும் ஊரில் ஆதவன் என்பவன் தன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தான். அவர் இளம் வயதிலே மிகவும் கஷ்டப்பட்டு பொருள்களை சேர்த்து வைத்தான். முன்னோர்கள் சொல்வார்களே வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி என்பது போல் அவன் பொருள் சேர்த்தான். இப்படியே பல ஆண்டுகள் கழிந்தன. அவனிடம் ஐந்தாயிரம் பொற்காசுகள் வரை சேர்ந்தன. அவற்றை எண்ணிப் பார்த்து பார்த்து மகிழ்ச்சி அடைந்தான். வாழ்க்கை முழுவதும் பொருள் சேர்ப்பதிலேயே கழித்து விட்ட அவன் பொற்காசுகளில் சிலவற்றைச் செலவு செய்து இனி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைத்தான்.

அப்பொழுது அவன் முன்பு எமன் தோன்றினான். அவனிடம் உன் உயிரை எடுத்துச் செல்ல வந்திருக்கிறேன் என்றான். அதற்கு அழுது புலம்பிய ஆதவன் தன் நிலையை எமனிடம் உருக்கமாகச் சொன்னான். இன்னும் என்னை மூன்றே மூன்று நாட்கள் வாழவிட்டால் தான் சேர்த்து வைத்திருக்கும் பொற்காசுகளில் பாதியைத் தருகிறேன் என்றான். அதெல்லாம் முடியாது என்றான் எமன்.

இந்த ஐயாயிரம் பொற்காசுகளைச் சேர்க்க நான் எவ்வளவோ பாடுபட்டிருக்கிறேன். இதனால் மகிழ்ச்சியை எல்லாம் விட்டுக் கொடுத்து விட்டேன். இந்த ஒரு நாள் மட்டும் என்னை வாழவிடு. இந்தப் பொற்காசுகள் அனைத்தையும் எடுத்துக் கொள் என்று கெஞ்சினான். உன் பொற்காசுகள் ஏதும் எனக்கு வேண்டாம். நீ கெஞ்சிக் கேட்பதால் உனக்குச் சிறிது நேரம் அவகாசம் தருகிறேன். இன்றியமையாத வேலை ஏதேனும் இருந்தால் செய்து முடித்துக்கொள் என்றான் எமன்.

அதற்கு ஆதவன், உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்க்கையை கழியுங்கள். பணம் சேர்த்து வைப்பதை நல்வினை என்று நினைக்காதீர்கள். ஐந்தாயிரம் பொற்காசுகளால் என் வாழ்நாளை ஒரு நாள் கூட நீட்டிக்க முடியவில்லை என்று அவருடைய தினக்குறிப்புப் புத்தகத்தில் (Diary) கடைசியாக எழுதிவிட்டு எமனை தன் உயிரை எடுத்துக்கொள் என்றான் ஆதவன்.

தத்துவம் :

சேமிப்பு பிற்காலத்தில் நமக்கு உதவும். சேமிப்பதையே மனதில் கொண்டு நிகழ்காலத்தை இழக்க கூடாது. நாம் சம்பாதிக்கும் பணத்தை சிறிது செலவழித்து மகிழ்வுடன் வாழ வேண்டும். பணத்தை குறிக்கோளாக கொண்டு நம் வாழ்க்கையை இழந்துவிடக் கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக