உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் தாய்நாட்டில் இருந்து வெளிநாட்டிற்கு வேலை நிமித்தம் சென்றவர்கள் அங்கேயே சிக்கி உள்ளனர்.
இந்த நிலையில் ஒரு சில நாடுகள் தங்கள் நாட்டின் மக்களை சொந்த நாட்டிற்கு செல்ல அனுமதிக்குமாறு வலியுறுத்தி வருகின்றன. இதனை ஏற்று பல நாடுகள் அவர்களுடைய சொந்த விமானத்தில் வெளிநாட்டு மக்களை சொந்த நாடு திரும்ப ஏற்பாடு செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்தியாவில் உள்ள 41 பாகிஸ்தானியர்கள் நாடு திரும்ப அனுமதி அளிக்க வேண்டும் என பாகிஸ்தான் சமீபத்தில் கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இந்தியா, 41 பாகிஸ்தானியர்களையும் அட்டார் எல்லை வழியாக பாகிஸ்தான் செல்ல அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று 41 பாகிஸ்தானியர்களையும் நாடு திரும்ப அனுமதி அளித்த இந்திய அரசுக்கு பாகிஸ்தான் அரசு நன்றி தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக