Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 3 ஏப்ரல், 2020

விராட நாட்டை போர் தொடுக்கும் துரியோதனன்...!

பாண்டவர்களின் அஞ்ஞாத வாசம் முடியும் நிலை எட்டிக் கொண்டிருந்தது. பாண்டவர்கள், விராட நாட்டில் இருப்பதை அறிந்த துரியோதனன் விராட நாட்டின் மீது போர் தொடுக்க நினைத்தான்.

முன்பு பஞ்சத்தால் வாடிய விராட நாடு, இப்பொழுது செழிப்புடன் இருப்பதை அறிந்தான். விராட நாட்டின் மேல் தனக்கு இருக்கும் பகைமையை போக்கி கொள்ள சரியான தருணம் இது தான். கீசகனை இழந்ததால் விராட நாடும் இப்பொழுது வலுவிழந்து இருக்கும் என நினைத்தான். 

விராட நாட்டை முற்றுகை இடுவதன் மூலம் பாண்டவர்களை நாம் கண்டுபிடித்து விடலாம். அதனால் அவர்கள் மறுபடியும் வனம் செல்ல நேரிடும் என எண்ணினான். திரிகர்த்த நாட்டு மன்னன் சுசர்மன் துரியோதனனுக்கு உதவியாக வந்தான்.

சுசர்மாவை, தென் திசை நோக்கி படையெடுத்து செல்லுமாறு கூறினான். நான் வட திசை நோக்கி படையெடுக்கிறேன் எனக் கூறினான். முதல் திட்டமாக விராட நாட்டின் பசுக்களை கவர்வது தான். 

இதன் மூலம் நாம் பாண்டவர்களை கண்டுபிடித்து விடலாம் என்றான். அதனால் திரிகர்த்த நாட்டு மன்னன் சுசர்மாவை, பசுக்களை கவர்ந்து வருமாறு கூறி அனுப்பினான். பசுக்களை கவர்ந்து வர சுசர்மா தன் படைகளுடன் சென்றான். பசுக்களை கவர்ந்து செல்வதை அறிந்த விராட நாட்டு மன்னன் அதனை தடுக்க தன் படையுடன் வந்தான். 

இருவருக்கும் இடையே கடும் போர் நடைப்பெற்றது. போரில் சுசர்மா, தோல்வி அடையும் நிலைக்கு வந்தான். அப்பொழுது அவன் புத்துணர்ச்சி பெற்றது போல் எழுந்து பல அம்புகளை விராட படையின் மீது ஏவினான்.

சிறிது நேரத்தில் விராட படை வீழ்ந்தது. உடனே சுசர்மா, விராட நாட்டு மன்னனை சிறைப்படுத்திக் கொண்டு சென்றான். போரைக் காண்பதற்காக மாறுவேடத்தில் இருந்த யுதிஷ்டிரன், பீமன், நகுலன், சகாதேவன் வந்திருந்தனர். விராட நாட்டு மன்னனை சிறைப்படுத்திக் கொண்டு செல்வதை பார்த்த யுதிஷ்டிரன், அவற்றை தடுக்க நினைத்தான். 

உடனே பீமனுக்கு கண்ணால் சைகை காண்பித்தான். அதன் கூற்றை புரிந்துக் கொண்ட பீமன், போர் புரிய வீரத்துடன் சென்றான். அப்பொழுது யுதிஷ்டிரன், அவனை தடுத்து தம்பி பீமா! நாம் இப்பொழுது மாறுவேடத்தில் இருக்கின்றோம். அதனால் நம் வீரத்தை வெளிப்படையாக காண்பிக்க கூடாது என்று கூறி அனுப்பினான். அதன் பிறகு பீமன் சுசர்மாவின் தேரை அடைந்தான்.

தேரை உடைத்து சுசர்மாவுடன் போரிட்டான். அவனை வீழ்த்திய பின் விராட நாட்டு மன்னனை அவனிடம் இருந்து விடுவித்து அழைத்து வந்தான். மாறுவேடத்தில் தாமக்கிரந்தி என்ற பெயருடன் இருந்த நகுலன் போரில் ஆயிரமாயிரம் குதிரைகளை தன் வசப்படுத்திக் கொண்டான். 

மாறுவேடத்தில் தந்திரி பாலன் என்னும் பெயருடன் இருந்த நகுலன், பசுக்களை மீட்டு ஆயர்களிடம் கொடுத்தான். விராட மன்னன் பீமனுக்கு நன்றி கூறினான். சுசர்மன் போரில் தோற்றதை அறிந்த துரியோதனன் கோபம் கொண்டான். 

உடனே வடதிசையை நோக்கி போருக்கு சென்றான். துரியோதனன் போருக்கு வருவதை அறிந்த சுதேட்சணை பணிப்பெண்களிடம், துரியோதனின் படை நாட்டை முற்றுகையிட வந்துக் கொண்டிருக்கின்றன.

அதனால் நீங்கள் அனைவரும் ஆயுதங்களுடன் கோட்டை மதில் சுவரின் மீதேறி நாட்டை காப்பாற்றுங்கள் எனக் கூறினாள். அப்பொழுது அரச குமாரியின் மகன் உத்திர குமாரன், தாயே! நான் இருக்கையில் தாங்கள் இவ்வாறு பெண்களை எதிரிகள்ள படைகளை தடுக்க அனுப்பலாமா? நான் போருக்கு சென்று துரியோதனனை எதிர்த்து போரிடுகிறேன் என்றான். 

இதைக் கேட்டு கொண்டிருந்த திரௌபதி(சைரந்தரி), அரசி! இதோ இவள் பெயர் பிருகன்னளை. இவள் தேரோட்டுவதில் வல்லவள். இவளுக்கு அர்ஜூனனிடம் தேரோட்டிய அனுபவம் உண்டு. இவள் இளவரசருடன் சென்றால் அவருக்கு உதவியாக இருக்கும் என்றாள். அரசக்குமாரியும் இதற்கு சம்மதம் தெரிவித்தாள்.

உத்திர குமாரன், அர்ஜூனனிடம் தேரோட்டியாக இருந்தவள் தனக்கு தேரோட்டியாக இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தான். அரசக்குமாரியிடம் இருந்து விடைப்பெற்று இருவரும் போர்களத்திற்கு சென்றனர். துரியோதனனின் பெரிய படையை கண்டு உத்திரகுமாரன் அஞ்சினான். உடனே, அர்ஜூனனிடம்(பிருகன்னளை), துரியோதனனின் படை மிகப்பெரியதாக உள்ளது. இவர்களை நாம் எவ்வாறு எதிர்க் கொள்வது. இவர்களிடம் சிறைப்படுவது உறுதி என கூறினான். 

அர்ஜூனன்(பிருகன்னளை), இளவரசே! தாங்கள் மாவீரரான விராட நாட்டு மன்னனின் மகன், இவ்வாறு கூறுதல் கூடாது. போர்க்களத்திற்கு வந்துவிட்டு திரும்பிவிட்டால் எதிரி படைகள் நம்மை வீண் பரிகாசம் செய்வார்கள்.

போர்க்களத்திற்கு வந்துவிட்டால் ஒன்று வெற்றியோடு திரும்ப வேண்டும். அப்படி இல்லையென்றால் வீரமரணம் அடைய வேண்டும். இவ்வாறு பயந்து ஓடுதல் கூடாது. இளவரசே! நீங்கள் போர்க்களத்தில் இறங்கி அம்புகளை ஏவுங்கள் மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றான். 

ஆனால் உத்திர குமாரன் இதற்கு மறுத்து அங்கிருந்து திரும்பிச் செல்ல பார்த்தான். அர்ஜூனன் அவனை தேரில் கட்டி, ஆயுதங்களை மறைத்து வைத்திருந்த இடத்திற்கு சென்று வில்லை கொண்டு வந்தான். உத்திர குமாரனின் கட்டை அவிழ்த்துவிட்டு இது அர்ஜூனனின் வில். இதை உபயோகப்படுத்தினால் எதிரி படைகள் வீழ்ந்துவிடுவார்கள் என்றான்.

உத்திர குமாரன், பிருகன்னளையே(அர்ஜூனன்), அர்ஜூனனின் வில் இங்கு இருக்கும் போது அர்ஜூனன் எங்கே எனக் கேட்டான். அர்ஜூனன்(பிருகன்னளை), இளவரசே! அர்ஜூனன் இப்பொழுது அஞ்ஞாத வாசம் இருக்கின்றான். அதை முடித்த பின்பு தான் திரும்பி வருவான் என்றான். இதைக் கேட்ட உத்திர குமாரன் இவள் நிச்சயம் அர்ஜூனனாக தான் இருப்பார் என நினைத்தான். பிருகன்னளையிடம்(அர்ஜூனன்), நான் இனி அஞ்சி ஓட மாட்டேன். தங்களுக்கு தேர் சாரதியாக இருந்து போரை எதிர்க்கொள்வேன் என்றான்.

தொடரும்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக