வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை சேர்த்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் குறுந்தகவல் செயலியாக மட்டுமின்றி க்ரூப் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் என பல்வேறு அட்டகாச அம்சங்களை வழங்கி வருகிறது.
அதன்படி இந்த வாட்ஸ்அப் நிறுவனம் இதுவரை வாய்ஸ் மற்றும் வீடியோ கால் மேற்கொள்ள அதிகபட்சம் நான்கு பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும என்ற நிலை நிலவியது, தற்சமயம் இந்த எண்ணிக்கையை வாட்ஸ்அப் அதிபடுத்தி உள்ளது.
இப்போது உள்ள காலக்கட்டத்தில் க்ரூப் வீடியோ கால் சேவைக்கான தட்டுப்பாடு அதிகரித்து இருக்கு நிலையில் வாட்ஸ் க்ரூப் கால் அம்சத்தலி மாற்றம் செய்ய இருக்கிறது.
குறிப்பாக பயனர்கள் க்ரூப் கால் செய்ய வாட்ஸ்அப் க்ரூப் சென்று உரையாட வேண்டியவர்களை தேர்வு செய்து அழைப்பை மேற்கொள்ளலாம். அழைப்பை மேற்கொண்டதும் வாட்ஸ்அப் க்ரூப் கால் அம்சத்தை இயக்கவிடும். இதுதவிர பயனர்கள் கால்ஸ் டேப் சென்று பேச விரும்புவோரை தனித்தனியாக தேர்வு செய்து க்ரூப் கால் செய்யலாம் என்பது குறிப்பிடத்தகக்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக