சென்னையில் கொரோனா பாதிப்பு உள்ளவர் வீட்டுக்கு சென்று விளையாடிய மற்ற நபர்களுக்கும் கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா அறிகுறி உள்ளவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை பூந்தமல்லியில் 6வது வார்டில் வசிக்கும் நபர் ஒருவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
ஆனால் அவர் தனியாக இருக்க விரும்பாமல் பக்கத்து வீட்டுக்காரர்களை அழைத்து தாயம் விளையாடியுள்ளார். இதனால் பக்கத்து வீட்டுக்காரருக்கும் கொரோனா பரவியுள்ளது தற்போது உறுதியாகியுள்ளது.
அதை தொடர்ந்து அவர்களுடன் வேறு யாரெல்லாம் விளையாடினார்கள் மற்றும் தொடர்பில் இருந்தார்கள் என்பது குறித்து ட்ராக்கிங் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் பாதிக்கப்பட்டவரின் வீட்டை சுற்றி 5 கி.மீ தூரத்திற்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மக்கள் விழிப்புணர்வின்றி செய்யும் காரியங்களால் ஆபத்து அதிகமாவதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக