இது பொதுவாக பொழுதுபோக்கு மட்டும் அல்லாது பல்நோக்கு பயன் உடைய ஆப் என்றும் தெரிவித்துள்ளது இந்த கூட்டணி.
குறிப்பாக கேமிங், ஹோட்டல் பதிவு, டிஜிட்டல் மணி டிரான்ஸ்பர், என பலவகையில் பயனுள்ளதாக இந்த ஆப் உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
பல்நோக்கு பயன்பாடு உடைய ஆப்
இது குறித்து எக்னாமிக் டைம்ஸ் அறிக்கையின் படி, சூப்பர் செயலி சீனாவில் இருக்கும் WeChat போன்றதொரு வரிசையில் இருக்கும், மேலும் இது பேஸ்புக்கின் வாட்ஸ் அப்பைப் பயன்படுத்துகிறது, இதனால் இது நாட்டின் மிகவும் பிரபலமான உடனடி செய்தி பயன்பாடாகவும் இருக்கும். அதோடு பல்நோக்கு பயன்பாடு பயனர்கள் ரிலையன்ஸ் சில்லறை கடைகள், ajio.com, ஹோட்டல் புக்கிங் மற்றும் கேமிங் போன்றவற்றினை இதில் அனுமதிக்கும்.
மார்கன் ஸ்டான்லி முதலீடா?
இதெல்லாவற்றையும் விட, முதலீட்டு வங்கியாளராக மார்கன் ஸ்டான்லி இதில் முதலீட்டாளராக வரப்போகிறதாம். ஆக மூன்று பெரு கைகளும் கைகோர்க்க போகிறதாம். இது ஒரு நிதி முதலீட்டுக்காக மட்டுமல்ல. இந்த ஒப்பந்தம் ரிலையன்ஸ் மற்றும் பேஸ்புக் இரண்டையும் வேறுபடுத்தும் ஒரு வணிகத்தை உருவாக்குவதாகும் என்றும் இந்த விஷயத்தைப் பற்றி அறிந்தவர்கள் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது தான் சூப்பர் ஆப்
எனினும் இதன் இறுதியான முடிவுகள் இன்னும் தெளிவாக தெரியவில்லை. கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக இந்த முடிவுகள் தாமதமாகலாம் என்றும் வலைத்தளம் கூறியது. சீனாவின் Wechat ஆப் ஆசிய சந்தைகளில் மிகவும் பிரபலமானது. இந்த நிலையில் மூன்று ஜாம்பவான்கள் இணைந்து உருவாக்கப்படும் இந்த சூப்பர் ஆப், யாரையெல்லாம் சந்தையை விட்டு விரட்ட போகிறதோ தெரியவில்லை.
முழுமையான திட்டம் என்ன?
அதில் சில்லறை விற்பனைக்காக ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் இதில் பொருட்களை வாங்க ஜியோ மணியையும், அஜியோவினையும் இதில் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் தற்போது கொரோனாவின் தாக்கத்தினால் இந்த திட்டம் பற்றி முழுமையான திட்டம் இன்னும் எதுவும் வெளியிடபடவில்லை. ஆக விரைவில் இது வெளிவரலாம் என்றும் நம்பப்படுகிறது.
பெரும் புரட்சி உருவாகலாம்
ரிலையன்ஸ் பற்றி நாம் புதிதாக சொல்லி தெரிய வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் ரிலையன்ஸ் ஜியோ எப்படி தொலைத் தொடர்பு துறையில், ஒரு மாபெரும் புரட்சியை உருவாக்கியதோ, அதே போல இதனையும் எதிர்பார்க்கலாம். ஏற்கனவே அமேசான் பிளிப்கார்டு போன்ற ஆன்லைன் சில்லறை விற்பனையை ஆன்லைன் மற்றும் ஆப்லைனிலும் உருவாக்கலாம் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த திட்டம் நிச்சயம் சந்தையில் ஒரு புரட்சியை உருவாக்கலாம் என்றும் கூறப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக