இந்த நிலையில் பாண்டிச்சேரி சுய்ப்ரே தெருவில் இயங்கும் ஸ்டேட் பேங்க் தலைமை அலுவலகதின் வளாகத்தில் ஏடிஎம் கருவிகள் உள்ளது. இந்த ஏடிஎம் மையத்தில் கடந்த 12-ஆம் தேதி இளைஞர் ஒருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். லாவகமாக ஏடிஎம்மை திறந்த அந்த இளைஞரால் லாக்கரை திறக்க முடியவில்லை.
இருசக்கர வாகன கிக்கர் மூலமாக ஏடிஎம் லாக்கரை திறக்க முயற்சி
இதையடுத்து அந்த இளைஞர் இருசக்கர வாகன கிக்கர் மூலமாக ஏடிஎம் லாக்கரை திறக்க முயற்சித்துள்ளார். அப்போது அதில் பொருத்தப்பட்டுள்ள அலாரம் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. அலாரம் சத்தத்தைக் கேட்ட அந்த இளைஞர் செய்வதறியாது தப்பி ஓடிவிட்டார்.
வங்கி அதிகாரிகள் அப்பகுதி போலீஸாருக்கு புகார்
இந்த சம்பவத்தையடுத்து வங்கி அதிகாரிகள் அப்பகுதி போலீஸாருக்கு புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீஸார் சிசிடிவி காட்சியை ஆராய்ந்தனர். அப்போது அந்த இளைஞர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது. சிசிடிவி காட்சியின் அடிப்படையில் போலீஸார் அந்த இளைஞரை அடையாளம் கண்டுபிடித்தனர்.
இளைஞரை போலீஸார் கைது செய்தனர்
புதுச்சேரி வக்கிரம்பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு இளைஞரை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் விழுப்புரம் மாவட்டம் ஆதிச்சனூர் பகுதியை சேர்ந்த பிரபு என்பது தெரியவந்தது. அவர் புதுச்சேரியில் பணி புரிந்து வந்ததாகவும், கொரோனா அச்சத்தால் தான் வேலை பார்த்த கடை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.
கையில் பணம் இல்லாத காரணத்தால் ஏடிஎம் கொள்ளை
இதையடுத்து கையில் பணம் இல்லாத காரணத்தால் ஏடிஎம் கொள்ளையடிக்க முயற்சித்ததாகவும், இதை மொபைலில் உள்ள யூடியூப் பார்த்து அதன்மூலம் திட்டமிட்டதாகவும் தெரிவித்துள்ளார், லாக்கரை உடைக்கத் தெரியாமல் உடைத்ததால் அலாரம் அடித்தது எனவும் தெரிவித்துள்ளார்.
இளைஞர் மீது வழக்குப் பதிவு
இதுதொடர்பாக அந்த பகுதி போலீஸார் கொள்ளை செயலில் ஈடுபட்ட இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்து, அவர் கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய இருசக்கர் கிக்கர், ராடு, அரிவாள், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அந்த இளைஞரை சிறையில் அடைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக