நம் அனைவரின் வீட்டிலுமே குழந்தைகள் இருப்பதுண்டு. குழந்தைகளை கவனமாக கவனித்துக் கொள்வது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. குழந்தைகளுக்கு எது தேவை, எது தேவை இல்லை என்பது குறித்து அவர்களால் சொல்ல இயலாது.
எனவே, அவர்களை அனைத்து விதத்திலும் கவனித்துக் கொள்வது நமது கடமை தான். தற்போது வெயில் காலம் துவங்கியுள்ள நிலையில், குழந்தைகளை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
கட்டில்
குழந்தைகள் நாம் பொதுவாக கட்டிலில் அல்லது தொட்டிலில் தான் படுக்க வைப்பதுண்டு. அவ்வாறு கட்டிலில் படுக்க வைக்கும் போது, வெயில் காலங்களில் அதிகமாக உஷ்ணம் காணப்படுவதுண்டு. அத்தனை தடுப்பதற்கு, தரையில் பாய் விரித்து, பருத்தி துணியை விரித்து படுக்க வைத்தால், குழந்தையை உஷ்ணத்தில் இருந்து பாதுகாக்கலாம்.
தண்ணீர்
வெயில் காலங்களில் அனைவருக்குமே தண்ணீர் தாகம் அதிகமாக எடுப்பதுண்டு. குழந்தைகளுக்கு, அவ்வாறு தண்ணீர் தாகம் எடுத்தால், அவர்களால் அதை கூற முடியாது. எனவே பால் குடிக்கும் குழந்தைகளுக்கு, மருத்துவரின் அனுமதியுடன், சுடவைத்து ஆற வைத்த தண்ணீரை அவ்வப்போது கொடுக்க வேண்டும்.
காற்று
வெயில்காலங்களில் குழந்தைகளுக்கு அதிகமாக வியர்வையை வெளியேறுவதால், அதிகப்படியான காற்று குழந்தையின் முகத்திற்கு நேரே படும்படி படுக்க வைக்க கூடாது. இது குழந்தைக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்திவிடக் கூடும். எனவே மிதமான காற்று குழந்தையின் முகத்தில் படும்படி வைக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக