இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களுக்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டது என்பது தெரிந்ததே. அதன்பின் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு தனி அறையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு ஆட்சியை நடத்தி வந்தார்
இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் போரிஸ் ஜான்சன் அவர்களின் உடல்நிலையில் பிரச்சினை ஏற்பட்டதால் உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் அதன் பின்னர் மூச்சு விடுவதற்கு சிரமமாக இருந்ததை அடுத்தது தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரது உடல் நிலை மோசமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்ததால் இங்கிலாந்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் மருத்துவர்களின் தீவிர சிகிச்சையின் காரணமாக தற்போது பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் ஆச்சரியம் தரத்தக்க வகையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் இதனை அடுத்து அவர் விரைவில் முழுமையாக குணமடைந்து விட்டார் டிஸ்சார்ஜ் செய்ய வாய்ப்பு இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன
இங்கிலாந்து பிரதமரின் உடல்நிலை முன்னேற்றம் அடைவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிரதமர் மோடி விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்ப வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட உலகின் பல்வேறு நாட்டு தலைவர்கள் போரிஸ் ஜான்சன் விரைவில் குணமாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக