ஊரடங்கால் மனைவியை பார்க்க முடியாமல் மனம் உடைந்த கணவர் வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் கொரோனா பாதிப்புகளும் மெல்ல அதிகரித்து வருகின்றன.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு 21 நாட்களுக்குள் பிறப்பிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த ஊரடங்கு உத்தரவு வரும் 14 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கு உத்தரவை மேலும் நீடிக்க வேண்டும் என ஒரு சில மாநிலங்கள் மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் ஊரடங்கால் மனைவியை பார்க்க முடியாமல் மனம் உடைந்த கணவர் வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். உத்திர பிரதேசத்தில் நடந்த இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கிற்கு முன் தாய் வீட்டிற்கு சென்றிருந்த மனைவி, ஊரடங்கு உத்தரவால் திரும்பி வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டாதல் மனைவி பிரிந்து இருக்க முடியாமல் கணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக