>>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • >>
  • டிஸ்னி இன்ஜினியர் அனைத்தையும் இழந்தார்—ஒரு AI புகைப்பட ஆப்பிற்காக!
  • >>
  • மர்மம் நிறைந்த இந்தியாவின் ரகசிய கோவில் – குல்தரா செவ்வேளூர் கோவில்
  • >>
  • 23-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஓய்வும் புத்துணர்ச்சியும் – மனக்கவலைக்கு மாற்று வழி!
  • >>
  • தாத்தையங்கார்பேட்டை காசி விசுவநாத சுவாமி கோயில் – ஒரு தனிப்பெரும் பரிகாரத் தலம்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 10 ஏப்ரல், 2020

    பாண்டவர்களின் விவாதங்கள் !

    சஞ்சயன் தூதவராக வந்து சென்றதற்கு பின்பு தருமர் மறுபடியும் துரியோதனனுக்கு ஒரு வாய்ப்பை அளித்துப் பார்ப்போம் என்றார். அதற்கு கிருஷ்ணரும் தயாரானார். 

    தருமர் கிருஷ்ணரிடம், ஏற்கனவே சஞ்சய முனிவர் தூது வந்ததால் பீமன் கடுமையாக சினம் கொண்டான். இப்பொழுது மீண்டும் ஒரு வாய்ப்பு அளிப்போம் என்று கூறியதை கேட்ட பீமன் இன்னும் ஆத்திரமடைந்தான். 

    ஆத்திரம் அடைந்த பீமன் கொதித்து எழுந்தான். நான் சமாதானமாக போக மாட்டேன். என்ன நடந்தாலும் நான் போர்தான் புரிவேன் என்று கோபமுடன் கூறினான். அர்ஜூனன், நகுலன் மற்றும் சகாதேவனும் சமாதானமாக போகலாம் என்று நினைக்கவில்லை.

     அனைவரும் போருக்கு தயாராக இருந்தனர். திரௌபதியும் துரியோதனன் சபையில் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை கூறி அழுதாள்.

    பீமன் கிருஷ்ணரை பார்த்து எங்களுக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டத்தில் பெரிய துரதிர்ஷ்டம் வேறு யாரும் இல்லை எங்கள் அருகிலேயே இருக்கிறார்கள். 

    துரியோதனனால் படாத துன்பங்களை அனுபவித்தோம். நானும், அர்ஜுனனும் மற்றும் திரௌபதியும் மனதில் சுமந்திருக்கும் எண்ணற்ற துன்பங்களை இவர் புரிந்து கொள்ளாமல் எங்களை மேலும் துன்பப்படுத்துகிறார். 

    பீமன் கூறியதைக் கேட்ட தருமன், பீமா! பொறுமையை இழந்து பேசாதே. அமைதியாக இருப்போம். சமாதானமாக கேட்டுப்பார்ப்போம். இயலவில்லை என்றால் போர் புரிவோம். சினம் கொள்ள வேண்டாம் என்று கூறினான்.

    அதற்கு பீமன், அண்ணா! இதற்கு மேல் என்னிடம் எதுவும் கூற வேண்டாம். தூதனுப்பும் எண்ணத்தைக் கைவிட்டு விடுங்கள். இல்லை என்றால் நான் தூது செல்கிறேன். 

    என்னை தூது அனுப்புங்கள். நான் அங்கு சென்று நாம் செய்த சபதங்களை நிறைவேற்றி விட்டு வருகிறேன். நான் அங்கிருந்து திரும்பும் போது அஸ்தினாபுரத்தில் கௌரவர்களில் ஒருவர் கூட எஞ்சியிருக்கமாட்டார்கள் என்று கோபமாக கூறினான். 

    கிருஷ்ணர், பீமனிடம் கோபத்தை பொறுத்து அமைதியாக இருக்குமாறு சமாதானப்படுத்தினார்.

    அதன் பின் பீமன் அமைதியாக அமர்ந்தான். ஆனால் அர்ஜூனன் பொறுமையை இழந்து போருக்கு செல்ல தயாராகிவிட்டான். பொறுமையாக இருந்தது போதும் இனிமேல் போருக்கு செல்வது தவிர வேறு வழியில்லை. 

    திரௌபதிக்கு துன்பம் வந்த நேரத்தில் தங்களை நோக்கித்தானே கதறி அழுதாள். தாங்களே பொறுமையாக இருக்கச் சொன்னால் என்ன செய்வது? என்று கேட்டான். துரியோதனனும் சமாதானமாக போவதற்கு ஒரு போதும் சம்மதிக்கமாட்டான். அவன் நஞ்சைக் கக்கும் பாம்பு போன்றவன் என்று அர்ஜூனன் கூறினான்.

    அதன் பிறகு நகுலன் பேசத் தொடங்கினான். உலகில் இருப்பவர்கள் அனைவரும் பாண்டவர்கள் வீரர்கள் என்று நினைத்து பேசிக் கொண்டிருக்கும் புகழ் மொழிகளை நான் வீணாக்கப் போவதில்லை. 

    துரியோதனன் நமக்கு நாடு கொடுக்க வேண்டுமானால் போரைத் தவிர வேறு வழியில்லை. நாம் ஒன்றும் அவர்களிடம் பிச்சை கேட்கவில்லை. நமக்கு சொந்தமான நாட்டை கேட்கிறோம் என்று நகுலன் கூறினான். அடுத்து சகாதேவன், எது எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடக்கும். எல்லாம் உங்கள் மாயை. 

    போர் தான் நடக்க வேண்டும் என்பது நீங்கள் நினைத்தால் அது நடந்தே தீரும் என்று கிருஷ்ணரை நோக்கிப் புன்னகையோடு கூறினான்.

    சகாதேவன் மறைமுகமாகவும், சாமர்த்தியமாகவும் பேசி கிருஷ்ணரை திடுக்கிடச் செய்தான். நம்முடைய அவதார ரகசியத்தை மறைமுகமாக இவன் கூறிவிட்டான் என்று மனதில் வியந்து கொண்டே சகாதேவனைத் தனியாக அழைத்துக் கொண்டு சென்றார். 

    சகாதேவா! என் விளையாட்டைப் பற்றி நீ அறிந்து வைத்துக் கொண்டிருக்கிறாய். உனக்கு மிகவும் நன்றி. குறும்புத்தனமாகச் சிரித்துக் கொண்டே சகாதேவனை, நீ தான் பாரதப் போர் நடக்காமல் இருக்க ஒரு வழி கூற வேண்டும் என்று கிருஷ்ணர் கேட்டார். 

    அதற்கு சகாதேவன் கர்ணனுக்கு அரசாட்சியை அளித்துவிட வேண்டும். அர்ஜூனனைக் கொன்று திரௌபதியின் கூந்தலை அறுக்க வேண்டும். பிறகு தங்கள் கை கால்களில் விலங்கு மாட்டிக் கட்டிப் போட வேண்டும். இவ்வாறு செய்துவிட்டால் பாரதப் போர் நடக்காமல் தடுக்கலாம் என்று ஆவேசத்தோடு கூறினான்.

    கிருஷ்ணர், ஒரே ஒரு காரியத்தை மட்டும் உன்னால் கூடச் செய்ய முடியாது. என்னைக் கட்டுவதற்கு உன்னால் முடியுமா? இப்படிக் கூறிக் கொண்டே தனது விஸ்வரூபத்தில் பல்லாயிரம் வடிவ பேதங்களாக விரிந்து தோன்றி அவனை மருளச் செய்தார். 

    சகாதேவன் வியப்படையாமலும், திகைப்படையாமலும் சிரித்துக் கொண்டே நின்றான். இப்போது என்னைக் கட்டிப்போடு பார்க்கலாம் என்று கம்பீரமும், இறுமாப்பும் கலந்த குரலுடன் கிருஷ்ணர் கேட்டார். ஆனால் சகாதேவன் சிறிதும் தயக்கம் இன்றி பக்தி என்ற கயிற்றால் கிருஷ்ணரை இறுக்கிக் கட்டினான். சகாதேவா! உன் சொற்படியே நீ என்னைக் கட்டிவிட்டாய். வெற்றி உனக்குத்தான். இப்போது என்னை விட்டுவிடு என்றார் கிருஷ்ணர்.


    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக