>>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 21 ஏப்ரல், 2020

    ஒரு விவசாயின் ஏக்கம் !!

    தாங்கள் விளைவித்த விளைப்பொருட்களுக்கு சரியான விலை கிடைக்குமா.. என்ற ஏக்கம் ஒவ்வொரு விவசாயின் மனதிலும் உள்ளது. ஏனென்றால் விவசாய விளைபொருட்களை விளைவிக்கும் விவசாயிகளுக்கு அதற்கான விலையினை தீர்மானம் பண்ணும் நிலை இல்லை.

    இதன் காரணமாக விவசாயத்தை கைவிடும் நிலையில் பல விவசாயிகள் உள்ளனர். இதை ஒரு சிறு கதை மூலம் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

    பசுமைசோலை என்னும் அழகிய கிராமத்தில், மிகப்பெரிய நந்தவனம் இருந்தது. அந்த நந்தவனம் முழுவதும் பூக்கள் பூத்து இருந்தன. இதனால் நந்தவனம் முழுவதும் நறுமணம் வீசியது. தினமும், இரண்டு வண்டுகள் நந்தவனத்திற்கு வருவதும், அங்கே இருக்கிற பூக்களில் இருந்து தேனை குடிப்பதுமாக இருந்தன. நந்தவனத்தில் இருக்கிற பூக்களுக்கு தங்களிடம் தினமும் தேனைக்குடிக்கிற இந்த வண்டுகள், ஒரு நாளாவது நமக்கு ஏதாவது உதவி செய்ததுண்டா என மிகுந்த மனவருத்தம் அடைந்தன. ஆனால் வண்டுகள் இரண்டும் இதை பற்றியெல்லாம் கவலைப்படுவதாக இல்லை. நேரம் காலம் புரியாமல் நந்தவனத்திற்கு வருவதும், அங்குள்ள தேனை ஆசை தீர குடிப்பதுமாக இருந்தன.

    ஒரு நாள் அதிகாலையில் ஆவலோடு இரண்டு வண்டுகளும் நந்தவனப் பூக்களின் மீது அமர்ந்தன. உடனே அங்கு இருந்த பூக்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து வண்டுகளே..! வண்டுகளே..! என்றது. வண்டுகள் ஆச்சரியத்துடன்!! ஆ.. பூக்களா பேசுகின்றன.. என்று ஆச்சரிப்பட்டன. உடனே வண்டுகள், பூக்களிடம் உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள் என்றது. வண்டு நண்பர்களே..!! தினமும் எங்களை தேடி வந்து நன்றாக தேனை குடிக்கிறீர்கள். ஆனால் எங்களுக்காக இதுவரை என்ன செய்தீர்கள்... இப்போது நினைத்தாலும், நீங்கள் இருவரும் எங்களுக்கு உதவலாம். ஆம்! எங்களுக்கு கடுமையான வெப்பத்தினால் நிறைய தண்ணீர் தேவைப்படுகிறது. தாங்கள் இங்கே வரும் போது, கொஞ்சம் தண்ணீர் எடுத்து வந்து எங்களுக்கு தரலாமே என்று கேட்டன.

    பூக்களே..!! உங்களிடமிருந்து தேனை உண்பது மட்டும் தான் எங்களுடைய வேலை. உங்களுக்கு தண்ணீர் கொடுப்பது எங்களின் வேலையில்லை. நீங்கள் கேட்பது, உங்களின் உரிமையும் அல்ல.. என்று இரண்டு வண்டுகளும் திமிராக பேசின. வண்டுகள் பேசியதை கேட்டு பூக்கள் மிகவும் கவலைப்பட்டன. இப்படியே சில நாட்கள் சென்றன. கடுமையான வெப்பம் மற்றும் வறட்சியின் காரணமாக பூக்கள் எல்லாம் வாட துவங்கியது. எதை பற்றியும் கவலைபடாத வண்டுகள் மீண்டும் தேனை குடித்துவிட்டு சென்றன. வாடி காட்சி அளித்த பூக்கள், தண்ணீர் இல்லாத காரணத்தால், ஒவ்வொன்றாக இறக்க துவங்கின. நந்தவனமே வறண்டு காணப்பட்டது. பூக்களெல்லாம் காய்ந்து போயின.

    இதுவரை எதை பற்றியும் கவலைப்படாதா வண்டுகள், முதல் முறையாக உணவிற்காக திண்டாட துவங்கின. பூக்கள் இல்லை. அதனால், தேன் இல்லை. வண்டுகள் நிலை மிகவும் பரிதாபமானது. நம் சுயநலத்தால் தான் இந்நிலை என வண்டு வருந்தியது. பூக்கள் கேட்ட போது நாம் உதவி செய்து இருக்க வேண்டும். தண்ணீர் பஞ்சம் போகின்ற வரையிலாவது நம் சக தோழர்களை வைத்து, தண்ணீர் ஊற்றி காப்பாற்றி இருக்கலாம். இருக்கும் போது தெரியாத பூக்களின் அருமை அவை காய்ந்த போது தான் நமக்கு தெரிகிறது என்று சொல்லியவாறு இரண்டு வண்டுகளும் செத்து மடிந்தன.

    தத்துவம் :

    விவசாயிகளின் பிரச்சனைகளை விவசாயிகளே பார்த்து கொள்ளட்டும் என்று இல்லாமல் நாமும் நம்மால் முடிந்த அளவிற்கு விவசாயிகளுக்கு உதவிகளை செய்வோம்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக