Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 29 ஏப்ரல், 2020

கர்ப்பிணி பெண்கள் தர்பூசணி விதைகளை சாப்பிடுவதால் என்ன நன்மை!

நம் விரும்பி சாப்பிடும் தர்பூசணி பழம் விதையில் இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் பி மற்றும் அந்த அளவுக்கு புரதச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த தர்பூசணி விதையை தோல் நீக்கிய பின்பு, நல்லா வெய்யிலில் காய வைத்து பின் நெய்யிட்டு வறுத்து கொஞ்சம் உப்பு, மிளகு சேர்த்து நாம் சாப்பிடும் உணவோடு சாப்பிட்டு வந்தால் நம்முடைய ஜீரண மண்டலத்தின் செயல் திறனை அதிகரிப்பதோடு, நம்முடைய நரம்பு மண்டலத்தையும் பலப்படுத்தும்.  கர்ப்பிணிகள் நெஞ்சு எரிச்சல் இருந்தால் இந்த விதையை உண்ணுவது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.

20 கிராம் தர்பூசணி விதையில் உத்தேசமாக 150 கலோரி சக்தி உள்ளதாம். 30 கிராம் எடையில் சுமார் 300 விதைகள் இருக்கும் என்றால் இதை தேவைக்கேற்ப உண்ணலாம். தற்போது கோடை காலம் என்பதால் நமக்கு நமக்கு நினைவுக்கு வருவது தர்பூசணி பழம் தான். கொளுத்தும் கோடை வெயில் வெளுத்து வாங்கும் வெக்கையிலிருந்து நமது தாகத்தை தணிக்க நிறைய வழிகள் உள்ளன.

சூட்டை தணிக்கும் பழவகைகள், இளநீர், தயிர், மோர் என எல்லாம் இருந்தாலும் நமக்கு பார்க்கிற இடத்தில் எல்லாம் ஈசியாக கிடைப்பது தர்பூசணிப் பழம் மட்டும் தான். சில பழங்களில் எல்லாம் நீர்ச்சத்து என்பது முப்பது சதவிகிதம் முதல் 40 சதவிகிதம் வரை மட்டுமே இருக்கும். ஆனால் தர்பூசணி பழத்தில் மட்டும் 90 சதவிகிதம் வரை நீர்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதாம். பெரும்பாலும் கிராமப்புறங்களில் இப்பழத்தை தண்ணீர் பழம் என்று பெயர் வைத்து அழைப்பார்கள்.  தர்பூசணி நம் அனைவருக்கும் பெரும்பாலானவர்கள், தர்பூசணிப் பழத்தை வாங்கினால், பழத்தை உண்டுவிட்டு, அதில் உள்ள விதைகளை தூக்கி தூற வீசுவது வழக்கம். காரணம் தர்பூசணிப் பழத்தின் விதைகளின் நிறமும், அதன் வாசனையும் தான். அந்த காரணத்து நாளையே சிலர் தர்பூசணி பழத்தை அறுவறுப்பாக புடிக்காத மாதிரியாகவும் பார்க்கிறார்கள். ஆனால் சொல்லப்போனால் அந்த விதைகளில் தான் நம்முடைய ஆரோக்கியதிற்கு உதவும் சத்துக்கள் நிறைந்துள்ளன என்பது நிறைய நபருக்கு தெரியாது. தர்பூசணி விதையில் பொட்டாசியம், இரும்பு, வைட்டமின் பி மற்றும் புரதச் சத்துக்கள் நிறைந்துள்ளன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக