ஒரு காட்டு அதிகாரி இருந்தார். அவருக்கு அழகான ஒரு மகள் இருந்தாள். ஒரு நாள் பட்டாம்பூச்சியைத் துரத்திக்கொண்டே அந்தப் பெண் காட்டிற்கு சென்றாள்.
அப்போது அவளை பார்த்த ஒரு சிங்கத்திற்கு அந்தப் பெண்ணை மிகவும் பிடித்துப்போய் விட்டது. அதனால் காட்டு அதிகாரியிடம் சென்று, தனக்கு உங்கள் மகளைக் கல்யாணம் செய்து வையுங்கள் என்று கேட்டது.
அதிகாரி சிங்கத்தைப் பார்த்து பயந்தார். அதனால், என்ன செய்யலாம் என்று யோசித்தார். அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.
அவர் சிங்கத்தைப் பார்த்து, காட்டு ராஜா, காட்டு ராஜா என் மகள் ரொம்பப் பயந்தவள். உன்னுடைய பற்களையும் நகங்களையும் எடுத்துவிட்டால், அவள் பயப்படமாட்டால் அப்புறம், நான் அவளை உனக்குக் கல்யாணம் செய்து தருகிறேன்! என்று சொன்னார்.
அந்தப் பெண்மீது கொண்ட பிரியத்தால் சிங்கம் அதற்குச் சம்மதித்தது. காட்டு அதிகாரி, முதலில் அதன் பற்களைப் பிடுங்கினார். அதன்பின், நகங்களை வெட்டினார்.
பற்களையும் நகங்களையும் இழந்த சிங்கம், பலம் எல்லாவற்றையும் இழந்து ஆட்டுக் குட்டிபோல் இருந்தது! உடனே காட்டு அதிகாரி ஒரு தடியை எடுத்து, சிங்கத்தை பலமாக அடித்து விரட்டினார். நடக்காத ஒரு விஷ்யத்திற்க்கு ஆசைப்பட்டால் நஷ்டம் நமக்குத்தான் என்று புரிந்துகொண்டு, தப்பித்தோம், பிழைத்தோம் என்று சிங்கம் ஓடியே போய்விட்டது!
நீதி :

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக