Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 11 ஏப்ரல், 2020

Google அதிரடி அறிவிப்பு - அடுத்த இரண்டு மாதத்திற்கு 'இது' இலவசம்! புகுந்து விளையாடுங்க.!

கூகிள் தனது கிளவுட் கேமிங் சேவையான ஸ்டேடியா புரோ சேவையை இப்பொழுது இலவசமாகியுள்ளது. கூகிளின் இந்த கேமிங் ஸ்டேடியா சேவை அடுத்த இரண்டு மாதங்களுக்கு 14 நாடுகளில் இலவசமாகக் கிடைக்குமென்று அறிவித்துள்ளது. இந்த இலவச ப்ரோ சந்தாவுடன் பயனர்களுக்குக் கிடைக்கும் இலவச கேம் மற்றும் நன்மைகள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

கூகிள் நிறுவனமா தந்து கிளவுட் கேமிங் சேவையான Google Stadia Pro சேவையை 14 நாடுகளில் இலவசமாகியுள்ளது. இந்த ஸ்டேடியா புரோ சேவைக்கான சந்தா கட்டணம் சுமார் 130 டாலர் ஆகும், இந்த கட்டண தொகையைக் கூகிள் தற்பொழுது தள்ளுபடி செய்துள்ளது. இதனால் மக்கள் கோவிட்-19 லாக்டவுனுக்கு மத்தியில் வீட்டிலேயே தங்கியிருப்பதால் அவர்களுக்கு மேலும் பொழுதுபோக்கான விஷயமாக இது இருக்கும் என்று கூறியுள்ளது.

இரண்டு மாத இலவச சந்தா

கூகிளின் ஸ்டேடியா புரோ சந்தாவைப் பயனர்கள் பதிவு செய்யும்பொழுது இந்த இரண்டு மாத இலவச சந்தாவுடன் ஒன்பது ப்ரோ கேம்களுக்கான உடனடி அணுகல் இரண்டு மாத காலத்திற்கு இலவசமாகக் கிடைக்கிறது. இலவச கேம்கள் உட்பட கிரிட், டெஸ்டினி 2 தி கலெக்ஷன், தம்பர் மற்றும் ஸ்டீம்வொர்ல்டு க்யுவெஸ்ட் போன்ற ஒன்பது ப்ரோ கேம்களும் கிடைக்கப்பெறுவீர்கள்.

 பணம் செலுத்திய ஸ்டேடியா புரோ சந்தாதாரருக்கு

அதேபோல் ஸ்டேடியா தாளத்திலிருந்து இன்னும் அதிகமான கேம்களை நீங்கள் பர்ச்சேஸ் செய்துகொள்ளலாம். நீங்கள் வாங்கும் கேமின் ஸ்டேடியா புரோ சந்தாவை ரத்து செய்தாலும் கூட அது உங்களுடையதாகவே இருக்கும். நீங்கள் ஏற்கனவே பணம் செலுத்திய ஸ்டேடியா புரோ சந்தாதாரராக இருந்தால், அடுத்த இரண்டு மாதங்களுக்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டெடியா ப்ரோ சந்தாவைப் பதிவுபெற இதை செய்யுங்கள்

  • அதன் பிறகு, ஸ்டேடியா புரோ ஒரு மாதத்திற்கு 9.99 டாலர் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • நீங்கள் ஸ்டேடியா தளத்திற்குப் புதிதானவர் என்றால் இந்த முறையைப் பின்பற்றிப் பதிவு செய்துகொள்ளுங்கள்.
  • ஸ்டெடியா ப்ரோ சந்தாவைப் பதிவுபெற Stadia.com என்ற வலைத்தளத்திற்குச் செல்லவும்.
  • நீங்கள் ஆண்ட்ராய்டு பயனர் என்றால் ஸ்டேடியா பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்யுங்கள்
  • நீங்கள் iOS பயனர் என்றால் அதற்கான ஸ்டேடியா பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
  • உங்களுக்குப் பிடித்த (HID இணக்கமான) யூ.எஸ்.பி ஆதரவு கொண்ட மவுசு அல்லது கீபோர்டு மூலம் உங்கள் லேப்டாப், டெஸ்க்டாப் அல்லது குரோம் ஓஎஸ் டேப்லெட்டில் ஸ்டேடியாவை விளையாடத் தயாராகுங்கள்.
  • கூகிள் பிக்சல் போன் அல்லது பலவிதமான ஆண்ட்ராய்டு போன்களில் வைஃபை மூலம் உங்களுக்கு பிடித்தமான கேமை விளையாடுங்கள்.

14 நாடுகளில் அறிமுகம்

இந்த சேவையை கூகிள் நிறுவனம் அமெரிக்கா, கனடா, யூகே, ஐயர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், நெதர்லாந்து, பெல்ஜியம், டென்மார்க், ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய 14 நாடுகளில் அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவையை கூகிள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இலவச ஸ்டேடியா ப்ரோ சேவை அடுத்த 48 மணி நேரத்திற்குள் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூகிள் தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக