இன்ஸ்டாகிராம் இறுதியாக நேரடி DM வெப் மெசேஜ்ஜிங் அம்சத்தை தற்பொழுது அறிமுகம் செய்துவிட்டது. இன்ஸ்டாகிராம் பயனர்கள் இன்று முதல், உலகளாவிய பயனர்கள் அனைவரும் இந்த அம்சத்தை இன்ஸ்டாகிராமின் வலைத்தளத்திற்குச் சென்று உங்கள் டெஸ்டோப் மூலம் இனி டிஎம் மெசேஜ்களை உங்கள் நண்பர்களுக்கு அனுப்ப முடியும்.
இப்போது அணுகக் கிடைக்கும் இந்த அம்சமானது வணிகங்கள், விற்பனையாளர்களுக்குப் பணம் செலுத்துபவர்கள் மற்றும் ஏராளமான டிஎம்களை அனுப்பும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு இது பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று இன்ஸ்டாகிராம் நிறுவனம் கூறியுள்ளது. அதேபோல், ஒவ்வொரு முறையும் டிஎம் அனுப்ப உங்கள் ஸ்மார்ட்போனை தேடவேண்டிய அவசியமில்லை.
இன்ஸ்டாகிராம் வெப் டிஎம் சேவை
இந்த இன்ஸ்டாகிராம் வெப் டிஎம் சேவை, அப்படியே நீங்கள் மொபைலில் நேரடி மெசேஜ்களை அனுப்பியது போலவே இப்போது உங்கள் டெஸ்க்டாப்பில் மெசேஜ் அனுப்ப அனுமதிக்கிறது. இந்த வெப் வெர்ஷனில் நீங்கள் புதிய குழுக்களை உருவாக்கலாம் அல்லது டிஎம் திரை அல்லது சுயவிவரப் பக்கத்திலிருந்து ஒருவருடன் அரட்டையைத் தொடங்கலாம்,
மெசேஜ் லைக் செய்ய டபுள் டேப்பிங், டெஸ்க்டாப்பில் இருந்து புகைப்படங்களைப் பகிரவும், உங்களிடம் உள்ள மொத்தமாகப் படிக்காத செய்திகளின் எண்ணிக்கையைப் பார்க்கவும் அனுமதிக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பே இந்த வெப் DM சேவை பற்றி இன்ஸ்டாகிராம் தகவல் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சோதனை ஓட்டம் வெற்றி
குறிப்பிட்ட சில எண்ணிக்கை பயனர்களுக்கு மட்டும் சோதனை ஓட்டமாக இந்தச் சேவைகளை அறிமுகம் செய்தது. சோதனை ஓட்டம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து தற்பொழுது இந்த சேவையை உலகளாவிய இன்ஸ்டாகிராம் பயனர்கள் அனைவருக்கும் கிடைக்கும் படி அறிமுகம் செய்துள்ளது.
வெப் இன்ஸ்டாகிராம்
இனி உங்கள் நண்பர்களுக்குச் செய்தி அனுப்ப நிறுவனத்தின் மொபைல் பயன்பாட்டிற்கு நீங்கள் திரும்ப வேண்டியதில்லை. இனி நீங்கள் அலுவலகத்திலிருந்தால் கூட உங்கள் வெப் இன்ஸ்டாகிராம் சேவையை ஓபன் செய்து டைரக்ட் மெசேஜ்களை நேரடியாக டெஸ்க்டாப் மூலமே அனுப்பலாம். இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டிருந்தது.
இன்று முதல் அணுக கிடைக்கினும் சேவை
இந்த புதிய அம்சத்தை அனைவரும் அணுகுவதற்காக இன்று காலை 10 மணி முதல் இச்சேவை நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சத்தைப் பயன்படுத்த விரும்பும் இன்ஸ்டாகிராம் பயனர்கள் உங்கள் டெஸ்க்டாப் ப்ரொஸ்வீர் சென்று இன்ஸ்டாகிராம் வெப் பேஜ் பகுதியை கிளிக் செய்து உங்கள் பயன்பாட்டைத் துவங்குங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக