Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 27 ஏப்ரல், 2020

OTT ரிலீஸ் சர்ச்சை, தியேட்டர் உரிமையாளர்கள் வருத்தப்பட தேவையில்லை: இயக்குனர் சேரன்

நடிகை ஜோதிகாவின் பொன்மகள் வந்தால் திரைப்படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகாமல் நேரடியாக OTT தளமான அமேசான் ப்ரைமில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


உலகம் முழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கும் சூழலில் தனக்கு மட்டும் பணம் வந்தால் போதும் என சூர்யா இப்படி செய்திருப்பதற்கு அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனால் சூர்யாவின் சூரரை போற்று படத்திற்கு சிக்கல் எழும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேரடி OTT ரிலீசுக்கு இயக்குனரும் நடிகருமான சேரன் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த வாய்ப்பு மற்ற படங்களுக்கும் கிடைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார் அவர்.

"யார் என்று பேசினாலும் இன்று நடந்தது சந்தோசம்.. ஆனால் இந்த வாய்ப்பு எல்லா திரைப்படங்களுக்கும் கிடைக்கும்போதே அந்த சிந்தனைகள் முழுமையாகிறது.. மீண்டும் இங்கும் ஒருசாரர் மட்டுமே பயன்பெறுவது மாறவேண்டும்...." என்று ட்விட் செய்துள்ளார் சேரன்.

"2D நிறுவனத்தின் நல்ல முயற்சி இது. என் பாராட்டுகள் மற்றும் ஆதரவு உண்டு. இதனால் சின்ன பட்ஜெட் படங்களுக்கு புது பாதை உருவாகும். ஆனால் இது பெரிய பட்ஜெட் படங்களுக்கு பொருந்தமாக இருக்காது. அதனால் தியேட்டர் உரிமையாளர்கள் இதுபற்றி வருத்தமடைய வேண்டியது இல்லை" என மற்றொரு ட்விட்டில் குறிப்பிட்டுள்ளார் சேரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக