மும்பை போலீஸ் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பப்ஜி வீடியோ ஒன்றை பதிவிட்டு ரெட் அலர்ட் பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா
சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூலம் இதுவரை உலகம் முழுவதும் 24 லட்சத்து 14 ஆயிரத்து 612 பேருக்கு தொற்று பரவி இருக்கிறதாக தெரிவிக்கப்படுகிறது. உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,63,834 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு கோரத் தாண்டவம்
குறிப்பாக அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனா பாதிப்பு அமெரிக்காவில் மட்டும் 7 லட்சத்து 40 ஆயிரத்தை கடந்துள்ளது. அதேபோல் உயிரிழப்பும் 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் 6 லட்சத்து 29, 441 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கை
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் 80 சதவீகிதம் பேருக்கு அறிகுறிகள் இன்றி கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல் நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 17,265 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 543 ஆகவும் உயர்ந்துள்ளது.
ஏராளமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்
இந்தியாவில் மொத்த கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18601 ஐ எட்டியுள்ளது, இதில் 14759 பேர் சிகிச்சையில் உள்ளனர். 3252 பேர் வெற்றிகரமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக இதுவரை 590 பேர் இறந்துள்ளனர்.
மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு
இதையடுத்து கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு பகுதிகளும் ரெட் அலர்ட் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த பகுதிகளில் பொதுமக்கள் வெளியே வராமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
பப்ஜி விளையாட்டுடன் தொடர்பு படுத்தி ஒரு வீடியோ
இதில் மும்பை போலீஸ் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பப்ஜி விளையாட்டுடன் தொடர்பு படுத்தி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதை தற்போது வரை 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களும், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளது.
விளையாட்டில் ரெட் ஜோன்
அந்த வீடியோவில் பப்ஜி விளையாட்டில் #GamingLessons #Safety101 #TakingOnCorona போன்ற ஹேஷ்டேக்குகளுடன் பகிர்ந்ததோடு, அந்த விளையாட்டில் ரெட் ஜோன் காண்பிக்கும் போது வீரர் வீட்டுக்குள் இருப்பதே பாதுகாப்பு என தெரிவிக்கப்படும். அதை தற்போது உள்ள சூழ்நிலையோடு ஒப்பிட்டு ரெட் அலர்ட் உள்ள பகுதிகளில் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும் படி அறிவுறுத்தி உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக