சியோமியின் நிறுவனம் தனது மிஜியா தயாரிப்பு சாதனத்தின் கீழ் ஒரு புதிய நுகர்வோர் சாதனத்தை நேற்று சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இன்டர்நெட் சேவையுடன் இயங்கக்கூடிய மிஜியா இன்டர்நெட் வாஷிங் மெஷின் & ட்ரையர் 1C என்ற புதிய மாடல் வாஷிங் மெஷினை அறிமுகம் செய்துள்ளது.
மிஜியா இன்டர்நெட் வாஷிங் மெஷின் & ட்ரையர் 1C
MIJIA தயாரிப்புகள் வரிசையில், புதிய மிஜியா இன்டர்நெட் வாஷிங் மெஷின் & ட்ரையர் 1C என்ற இந்த மாடல், கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மிஜியா இன்டர்நெட் வாஷிங் மெஷின் மற்றும் ட்ரையர் புரோ மாடலின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது. மிஜியா இன்டர்நெட் வாஷிங் மெஷின் மற்றும் ட்ரையர் புரோ மாடல் போல் இல்லாமல் இதில் XiaoAI வாய்ஸ் கண்ட்ரோல் முறை வழங்கப்பட்டுள்ளது.
XiaoAI வாய்ஸ் கண்ட்ரோல்
இந்த புதிய மிஜியா இன்டர்நெட் வாஷிங் மெஷின் & ட்ரையர் 1C மாடல், 10 கிலோ எடை கொண்ட வாஷிங் டேங்க் காபாஸிட்டி கொண்டது. இதில் ஏபிஎஸ் இன்ஜெக்ஷன் மோல்டிங் +தின் வால் ட்ரான்ஸ்மிஷன் சொலுஷன் உடன் தயாரிக்கப்பட்ட கட்டுப்பாட்டுப் கீபோர்டு பட்டன்களை கொண்டுள்ளது. XiaoAI வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் விர்ச்சுவல் அசிஸ்டன்ட் உதவியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய வாஷிங் மெஷின் 468 மிமீ விட்டம் கொண்ட கதவுடன் சமமாகக் கச்சிதமாக இருப்பதாக நிறுவனம் கூறியுள்ளது. முந்தைய மாடலில் வழங்கப்பட 0.960 கிலோவாட் சக்தியை விட குறைவாக இந்த சாதனத்தில் சியோமி நிறுவனம் வழங்கியுள்ளது. புதிய மிஜியா இன்டர்நெட் வாஷிங் மெஷின் & ட்ரையர் 1C மாடல் 0.873 கிலோவாட் சக்தி சுழற்சியைக் கொண்டுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
22 வெவ்வேறு வாஷிங் மோடு
இது தவிர, சமீபத்திய மிஜியா இன்டர்நெட் வாஷிங் மெஷின் & ட்ரையர் 1C மாடல், ஸ்மார்ட் ஏர் வாஷிங் உட்பட 22 வெவ்வேறு வாஷிங் மோடுகளை கொண்டுள்ளது. அறிக்கையின்படி, பயனர்கள் வாஷிங் மற்றும் டிரையர் முறைகளைத் துணிகளை முன்கூட்டியே மிஜியா பயன்பாட்டின் மூலம் பதிவு செய்து வைக்க முடியுமென்று நிறுவனம் கூறியுள்ளது.
விலை என்ன தெரியுமா?இந்த மிஜியா பயன்பாடு கஸ்டம் வாஷிங் சேவை மற்றும் உங்களுக்கு விருப்பமான ஆதரவையும் சேவ் செய்துகொள்ள அனுமதிக்கிறது. தற்போது, சியோமி நிறுவனம் இந்த மிஜியா இன்டர்நெட் வாஷிங் மெஷின் & ட்ரையர் 1C மாடலை சியோமி மாலில் முன்-விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. மிஜியா இன்டர்நெட் வாஷிங் மெஷின் & ட்ரையர் 1C சீனாவில் 2,099 யுவான் என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனத்தின் இந்திய மதிப்பு ரூ. 21,000 ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக