10
வயது சிறுமியிடம் தவறாக நடந்த கோவில் அர்ச்சகர் கைது.
இன்று
பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்வி குறியாக தான் உள்ளது. பெண்களை
பாதுகாப்பதற்காக அரசு சிறப்பு சட்டங்களை இயற்றினாலும், பெண்களுக்கு எதிரான
குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.
இந்நிலையில்,
சிவகுமார்(59) என்னும் கோவில் அர்ச்சகர், கடந்த புதன்கிழமை அன்று, சென்னை
மாடிப்பக்கம் அருகே உள்ள 10 வயது சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாக
கூறப்படுகிறது. இந்த சம்பவம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவர, பயத்தில்
சிவகுமார் தலைமறைவாகியுள்ளார்.
இதனையடுத்து,
அதிகாலை 5 மணியளவில் தனக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும் என
வந்த சிவாகுமாரை கையும், களவுமாக பிடித்த சிறுமியின் பெற்றோர் அவரை
வீட்டிற்குள்ளேயே வைத்து பூட்டி வைத்து விட்டு போலீசாருக்கு தகவல்
அளித்துள்ளனர்.
இதனையடுத்து,
போலீசார் சிவகுமாரை கைது செய்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக