>>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 22 மே, 2020

    யாரும் எதிர்பார்க்காத வசதியுடன் மூன்று சாம்சங் டிவி அறிமுகம்.! The Terrace.!

    நாடுகளுக்கும் விற்பனைக்கு வரும்
    சாம்சங் நிறுவனம் உலகம் முழுவதும் தனது சாதனங்களை அறிமுகம் செய்து நல்ல நிறுவனம் என்ற பெயரை பெற்றுள்ளது, குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் அனைத்துப் பொருட்களும் அதிக வரவேற்பை பெருகிறது மற்றும் தனித்துவமான பொருட்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது இந்நிறுவனம்.
    இந்நிலையில் சாம்சங் நிறுவனம் தனது முதல் அவுட்டோர் டிவி (outdoor TV ) மாடல்களை சவுண்பார் உடன் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக சாம்சங் தி டெரஸ் (The Terrace) என அழைக்கப்படும் இந்த புதிய டிவி மாடல்கள்
    இன்று முதல் அமெரிக்கா மற்றும் கனடாவில் விற்பனைக்கு வரும் என்றும், கூடிய விரைவில் அனைத்து நாடுகளுக்கும் விற்பனைக்கு வரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சாம்சங் தி டெரஸ் என அழைக்கப்படும் இந்த டிவி மாடல்கள் 55-இன்ச், 65-இன்ச், 75-இன்ச் என மூன்று அளவுகளில் கிடைக்கும். மேலும் இந்த ஸ்மார்ட் டிவிகளில் ஒஎல்இடி 4கே டிஸ்பிளே வசதி உள்ளது, மேலும் 2,000 nits வசதி உள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
    சாம்சங் நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ள ஸ்மார்ட் டிவிகளைப் பற்றி சுருக்கமாக கூறவேண்டும் என்றால், வெளிப்புறங்களில் கூட மிக தெளிவான காட்சியை வழங்கும் தொழில்நுட்பம் இவற்றுள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கண்ணை கூசுவதைக் குறைக்க அதன் சுற்றுப்புறங்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம் உள்ளடக்கத்தை மேம்படுத்துகிறது.
    சாம்சங் தி டெரஸ் என அழைக்கப்படும் ஸ்மார்ட் டிவிகள் IP55 மதிப்பீட்டில் வெளிவந்துள்ளது, எனவே இந்த சாதனங்கள் நீர் மற்றும் தூசிக்கு எதிரான வானிலை எதிர்ப்பு ஆயுள் கொண்டதாக இருப்பதாகவும், வெளியில் எளிதாக நிறுவுவதற்கு தகுந்தபடி இந்த சாதனங்கள் இருப்பதாகவும் சாம்சங் நிறுவனம் கூறுகிறது.
    இந்த சாம்சங் டிவிகள் வெளிப்புறங்களுக்கு தகுந்தபடி ஒஎஸ் அமைக்கப்பட்டுள்ளது, பின்பு மல்டி வியூ மற்றும் டேப் வியூவையும் ஆதரிக்கிறது. மேலும் இந்த சாம்சங் டிவி மாடல்களில் Bixby, அமேசான் அலெக்சா, கூகுள் அசிஸ்டெண்ட் உள்ளிட்ட ஆதரவுகளும் இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனம் கூறியுள்ளது.
    ஆடியோ பொறுத்தவரை இந்த டிவி மாடல்கள் ஒரு சவுண்ட்பார் உடன் வெளிவருகிறது, எனவே இது ஹோம் தியேட்டர் போன்ற அனுபவத்தை வழங்குகிறது என்று பிராண்ட் கூறுகிறது. சவுண்ட்பார் ஆழமான மற்றும் தெளிவான பாஸ் ஒலியை வழங்குகிறது.
    ஒலி அனுபவத்தைத் தனிப்பயனாக்க விரும்பும் வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட் டிவியை வைஃபை அல்லது புளூடூத் இயக்கப்பட்ட ஸ்பீக்கர்கள் அல்லது பிற சாதனங்களுடன் இணைக்க முடியும். டெரஸ் சவுண்ட்பார் விலகல் ரத்துசெய்யும் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது.
    மேலும் இந்த டிவி மாடல்களின் விலைப் பற்றிய சரியான தகவல் இல்லை, தகவல் கிடைத்ததும் உடனே அப்டேட் செய்கிறோம்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக