இந்தியாவில் தலைசிறந்த ஸ்மார்ட் டிவி என பெயர்பெற்ற சியோமி நிறுவனம், தற்பொழுது இந்தியாவில் 11,700 ரூபாய்க்கு ஒரு டிவியை கொண்டுவரவுள்ளது.
சியோமி நிறுவனம், கடந்த சில நாட்களுக்கு முன் சீனாவில் Mi TV E43K எனும் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்தது. அங்கு அதன் விலை, 1,099 CNY ஆகும். (அதாவது இந்திய மதிப்புப்படி 11,700 ரூபாய் ஆகும்) 43 இன்ச் கொண்ட அந்த டிவிஆனது, சீனா சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த டிவியை இந்தியாவில் வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. அந்த டிவி, 43 இன்ச் ஃபுல் HD (1,920x1,080 பிக்சல்கள்) டிஸ்ப்ளே கொண்ட 60 ஹெர்ட்ஸ் ரெபிரேசிங் ரேட் மற்றும் 178 டிகிரி கோணத்தையும் பெறும்.
இந்த டிவியில் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் க்ளாக் ஸ்பீட் கொண்ட டூயல் கோர் பிராஸசரை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி, 1 ஜிபி அளவிலான ரேம் மற்றும் 8 ஜிபி அளவிலான இன்டர்னல் மெமரியை கொண்டுள்ளது. மற்ற ஸ்மார்ட் டிவியை போலவே, இதிலும் வைபை வசதி உள்ளது. ஆனால், ப்ளூடூத் வசதி கிடையாது. அதனால் வழக்கமான சியோமி டிவியில் வரும் ஸ்மார்ட் ரிமோட்க்கு பதில் இன்ப்ரா ரெட் ரிமோட் வழங்கப்படுகிறது.
டிவியின் இணைப்பிற்காக, இரண்டு HDMI போர்ட்களை வழங்கும். அவற்றில் ஒன்று HDMI ARC-ஐ ஆதரிக்கும் (High Definition Multimedia Interface Audio Return Channel). அதனை தவிர்த்து, ஒரு ஏ.வி. போர்ட், இரண்டு யூ.எஸ்.பி போர்ட்கள் மற்றும் ஈதர்நெட் போர்ட்டும் வரும். ஆடியோவைப் பொறுத்தவரை, இந்த டிவியில் டிடிஎஸ் 2.0 (DTS 2.0) அம்சம், இரண்டு 8 வாட் ஸ்பீக்கர்களுடன் வரும்.
இந்த டிவி, ஆண்ட்ராய்டு டிவியின் அடிப்படையான பேட்ச்வால் இன்டர்பரன்ஸ் மூலம் இயங்குகிறது. இதனால் அதில் பல கண்டன்ட் இருக்கும். அதாவது கூகுள், நெட்பிளீஸ், போன்றவை. மேலும், சியோமி நிறுவனம், தற்பொழுது மேம்படுத்தப்பட்ட UI உடனான பேட்ச்வால் 3.0 ஐ இந்தியாவில் உள்ள மி டிவிகளுக்கு வெளியிடத் தொடங்கியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக