பேஸ்புக் CEO மார்க்கின் சொத்து மதிப்பு தற்போது 30 பில்லியன் டாலர்கள் அதிகரித்து 87.5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
உலகளவில் பரவி வரும் கொரோனா வைரஸானது, தொடர்ந்து உலக நாடுகளை தாக்கி வருகிறது. இந்நிலையில், அனைத்து நாடுகளிலேயும் இந்த வைரஸ் பரவாமல் இருக்க கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஊரடங்கு அமலில் இருப்பதால் அணைத்து நிறுவங்களிலும் பணிபுரியும் பணியாளர்கள் தங்களது வீட்டில் இருந்து பணிபுரிந்து வருகிறார்கள்.அந்த வகையில் சமூக வலையதளங்கள் தற்போது செம்ம ஆக்டிவாக உள்ளது.
இந்நிலையில் பேஸ்புக் CEO மார்க்கின் சொத்து மதிப்பு 45 சதவிகிதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது.மேலும் கடந்த 2 மாதங்களில் மட்டும் 30 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 57.5 பில்லியன் டாலராக இருந்த நிலையில் தற்போது அவரது மொத்த சொத்து மதிப்பு தற்போது 87.5 பில்லியன் டாலராக உள்ளது. இந்திய மதிப்பில் இவருடைய சொத்து மதிப்பு ரூ.6,65,63,43,750.00 ஆகும்.
அந்நிறுவனம் புதியதாக 50 பேர் வரை வீடியோ அழைப்பில் பேசும் மெசஞ்சர் ரூம்ஸ் வசதியை அறிமுகப்படுத்தியது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகின் மிகப் பெரிய சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்கள் கடந்த 2 மாதங்களாக அலுவலகத்திற்கு வராமல் வீட்டிலிருந்தே வேலை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக