Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 27 மே, 2020

நாள் முழுவதும் உட்கார்ந்திருப்பதைத் தவிர்க்க இந்த 5 வழிகளை பின்பற்றுங்கள்...

நாள் முழுவதும் உட்கார்ந்திருப்பதைத் தவிர்க்க இந்த 5 வழிகளை பின்பற்றுங்கள்...
நாள் முழுவதும் உட்கார்ந்திருப்பதைத் தவிர்க்க 5 வழிகள்:

நடைபயிற்சி படைப்பாற்றலை மேம்படுத்துகிறது. அதோடு உடல் எடையும் குறையும் : நாள் முழுவதும் உட்கார்ந்திருப்பதைத் தவிர்க்க 5 வழிகள்:

நடைபயிற்சியினால், உடல் எடை குறைவதோடு நமது படைப்பாற்றலும் அதிகரிக்கிறது. நமது ஆரோக்கியத்தை பராமரிக்க அதிக நேரம் நடப்பது மிகவும் நல்லது.  அதிக நேரம் நடக்கவும், நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதைத் தவிர்ப்பதற்கும் பயனுள்ள சில வழிமுறைகளை தெரிந்துக் கொள்வோம். நடைபயிற்சி மற்றும் உடல் பயிற்சிகள், அனைத்து வயதினருக்கும், ஆரோக்கியத்தை மேம்படுத்த  பெரிதும் உதவுகிறது. நடப்பதினால், படைப்பாற்றல் எவ்வாறு அதிகரிக்கிறது என்பதை ஸ்டான்ஃபோர்ட் ஆராய்ச்சியாளர்கள், ஒரு ஆராய்ச்சி மூலம் விளக்கியுள்ளனர்.

சுறுசுறுப்பாக இருக்கவும், எடையை குறைக்கவும், உட்கார்ந்திருக்கும் நேரத்தை குறைக்கவும், உடல் ஆரோக்கியத்தை நன்றாக வைத்துக் கொள்ளவும், நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

பல மணிநேரம் உட்கார்ந்திருப்பவர்களுடன் ஒப்பிடும்போது நடைபயிற்சி செய்யும் நபர்களுக்கு படைப்பாற்றல் அதிகமாக இருந்தது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. புதிய ஆய்வில்  நடைபயிற்சி செய்யும் ஒரு நபரின் படைபாற்றல்,  சராசரியாக 60 சதவீதம் அதிகரிக்கிறது என்பது   தெரியவந்துள்ளது.

நடைபயிற்சி எந்த வகையில் படைப்பாற்றலை அதிகரிக்கிறது?

"நடைபயிற்சியின் போது தங்கள்  சிந்தனை சிறப்பாக உள்ளது என்று முன்னரே பலர் கூறியுள்ளார்கள். இது ஏன் என்பதைக் கண்டுபிடிப்பதற்கு நாங்கள் இறுதியாக ஓரிருநடவடிக்கைகளை மேற்கொண்டோம்” என்று ஓப்பஸோ மற்றும் ஸ்வார்ட்ஸ் இருவரும்,  ஜர்னல் ஆஃப் எக்ஸ்பரிமென்டல் சைக்காலஜி: லர்னிங், மெமரி அண்ட் காக்னிஷன் (Journal of Experimental Psychology: Learning, Memory and Cognition) என்ற பத்திரிக்கையில் வெளியிட்ட ஆய்வில் எழுதியுள்ளனர்.

ஒரு அறையில் ஒரு டிரெட்மில்லில் வீட்டுக்குள் நடப்பது அல்லது புத்துணர்வை தரும்.   வெளியில் நடப்பது ஆகிய இரண்டிலும்  படைப்பாற்றல் சமமான அளவு அதிகரிக்கிறது என்று  ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. உட்கார்ந்திருப்பதை விட, அவுட்டோர் மற்றும் இண்டோர் நடைபயிற்சிகள்  மூலம் படைப்பாற்றல் இரண்டு மடங்கு அதிகரிக்கிறது.

"வெளியில் நடப்பது அதிக பலனை தரும் என்று நான் நினைத்தேன், ஆனால் ஒரு சிறிய அறையில் ஒரு டிரெட்மில்லில் நடப்பதுகூட  சிறந்த வகையில் பலனளிக்கிறது என்பது என்னை ஆச்சரியப்படுத்தியது" என்று சாண்டா கிளாரா பல்கலைக்கழகத்தின் துணை ஆசிரியராக பணிபுரியும் ஓப்பஸோ கூறினார்.

இருப்பினும்,  நடைபயிற்சியினால், படைப்பாற்றல் அதிகரிக்கும் என்றாலும், சிந்தனையை ஒருமுகப்படுத்துவதற்கும், நடைபயிற்சிக்கும் எந்த வித  தொடர்பும் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டனர்.

" எல்லா வேலையையும் நடந்து கொண்டே செய்ய வேண்டும் என  கூறவில்லை, ஆனால் புதிய சிந்தனைகள் அல்லது புதிய யோசனைகள் தேவைப்படும் போது, இது பெரிய அளவில் பலனளிக்கிறது" என்று ஓப்பஸோ மேலும் கூறினார்.

ஆக்கபூர்வமான சிந்தனையை அளவிட ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில்,  வழக்கமான வகையில் பணிகளை முடித்த 176 கல்லூரி மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் மீது   நான்கு  வகை பரிசோதனைகள்  நடத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக