இந்தியாவில் மட்டும், மார்ச் 11 முதல் டிசம்பர் 16 வரையில் ஊரடங்கு காரணமாக கருத்தரிப்பு அதிகமாகி 2 கோடியே 10 லட்சம் குழந்தைகள் பிறக்கப்போவதாக யுனிசெப் தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக உலகமெங்கிலும் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும்பாலும் தங்கள் வீட்டிலேயே இருக்கின்றனர்.
இதனால், பெண்கள் கருத்தரிப்பு அதிகமாகும் என ஏற்கனவே பல்வேறு கருத்துகணிப்புகள் வெளியாகின. தற்போது இதன் தொடர்ச்சியாக சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பான யுனிசெப் ஓர் தகவலை வெளியிட்டுள்ளது. அதில், இந்த ஊரடங்கு காரணமாக உலகம் முழுக்க 11 கோடியே 60 லட்சம் குழந்தைங்கள் பிறக்க போவதாக யுனிசெப் அறிவித்துள்ளது.
அதில், இந்தியாவில் மட்டும், மார்ச் 11 முதல் டிசம்பர் 16 வரையில் ஊரடங்கு காரணமாக கருத்தரிப்பு அதிகமாகி 2 கோடியே 10 லட்சம் குழந்தைகள் பிறக்கப்போவதாக யுனிசெப் தகவல் தெரிவித்துள்ளது. இதனால், வரும் மாதங்களில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு சரியான மருத்துவ வசதிகளை அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என யுனிசெப் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், நைஜீரியாவில் 64 லட்சம் குழந்தைகளும், பாகிஸ்தானில் 50 லட்சம் குழைந்தைகளும், இந்தோனிசியாவில் 40 லட்சம் குழந்தைகளும் அமெரிக்காவில் 32 லட்சம் குழந்தைகளும் பிறக்கும் என யுனிசெப் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக