கோவிட் -19 இன் தாக்கத்தினால், , 2020 ஆம் ஆண்டில் மொத்த மொபைல் போன்களின் ஏற்றுமதி 14.6 சதவீதம் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் ஸ்மார்ட்போன் எனப்படும் திறன்பேசியின் ஏற்றுமதி ஆண்டுக்கு 13.7 சதவீதம் குறைந்து இந்த ஆண்டு மொத்த 1.3 பில்லியன் யூனிட்களாக இருக்கும் என்று செவ்வாயன்று வெளியிடப்பட்ட கார்ட்னர் கணிப்பு மதிப்பிட்டுள்ளது.
"தொலைபேசியை பயன்படுத்துபவர்கள், லாக்டவுன் காலகட்டத்தில் தங்கள் மொபைல் போன்களின் பயன்பாட்டை அதிகரித்துள்ளார்கள். சக ஊழியர்கள், பணி கூட்டாளர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பங்களுடன் தொடர்பு கொள்வது இந்த முடக்கநிலையின்போது பெருமளவு அதிகரித்துள்ள நிலையில், வருமானம் குறைவதால், நுகர்வோரின் வாங்கும் திறன் குறையும். அனைவரும் தங்கள் விருப்பங்களின், செலவு செய்யும் பொருட்களின் பட்டியலை மாற்றியமைப்பார்கள். புதிதாக திறன்பேசியையோ, கைப்பேசியையோ வாங்குவதை தவிர்ப்பார்கள்" என்று கார்ட்னரின் மூத்த ஆராய்ச்சி இயக்குனர் ரஞ்சித் அட்வால் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
"இதன் விளைவாக, ஒருவர் தனது கைப்பேசியை 2.5 ஆண்டுகளில் மாற்றுகிறார் என்ற 2018 ஆம் ஆண்டின் மதிப்பீடு, 2020 ஆம் ஆண்டில் 2.7 ஆண்டுகளாக மாறிவிடும்" என்று அட்வால் தெரிவித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டில், மலிவு விலை 5 ஜி திறன்பேசிகள் வாடிக்கையாளர்களை, தங்கள் பழைய கைப்பேசியை மாற்றுவதற்கான ஊக்கத்தைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , கொரொனாவின் திடீர் வரவானது நிலைமையை மாற்றிவிட்டது.
2020 ஆம் ஆண்டில் மொத்த மொபைல் போன் ஏற்றுமதியில் 11 சதவீதம் மட்டுமே 5 ஜி திறன்பேசிகளாக இருக்கும் என்று அண்மை மதிப்பீடு கணித்துள்ளது.
"அதுமட்டுமல்ல, 5 ஜி திறன்பேசிகளின் அதிக விலையும், தற்போதைய சூழ்நிலையால் ஏற்படும் செலவு அதிகரிப்பும், வேறு பல காரணிகளும் 5 ஜி திறன்பேசியை வாங்கும் விருப்பத்தை மட்டுப்படுத்தும்."
5 ஜி உள்கட்டமைப்பில் தொடர்ந்து முதலீட்டை எதிர்பார்க்கும் சீனாவைத் தவிர பெரும்பாலான பிராந்தியங்களில் 5 ஜி திறன்பேசிகளுக்கான செலவு, தாக்கத்தை ஏற்படுத்தும், சீனாவில் 5 ஜி திறன்பேசிகள் திறம்பட சந்தைப்படுத்த அனுமதி கொடுக்கப்படுகிறது.
2020 ஆம் ஆண்டில் மட்டும் உலக அளவில், கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் மொபைல் போன்களின் ஏற்றுமதியும் விற்பனையும் 13.6 சதவீதம் வீழ்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கணினி ஏற்றுமதி இந்த ஆண்டு 10.5 சதவீதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2020 ஆம் ஆண்டில் நோட்புக்குகள், டேப்லெட்டுகள் மற்றும் Chromebook களின் ஏற்றுமதி குறையும், ஆனால் இவற்றைவிட கணினிகளின் ஏற்றுமதி பெருமளவில் குறையும் என்றும் கணிப்புகள் கூறுகின்றன.
"கணினிச் சந்தையில் கணிக்கப்படும் சரிவைவிட உண்மையான வீழ்ச்சி மிகவும் மோசமாக இருக்கலாம்" என்றும் அவர் கூறுகிறார்.
"இருப்பினும், COVID-19இன் காரணமாக, முடக்கநிலை அமல்படுத்தப்பட்டுள்ளதால் கோடிக்கணக்கான மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்யவும், புதிய நோட்புக்குகள், Chromebooks மற்றும் டேப்லெட்டுகளுக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கல்வி மற்றும் அரசு நிறுவனங்களும் கற்றலுக்கான தொழில்நுட்ப சாதனங்களுக்கான செலவினங்களை அதிகரித்துள்ளன" என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
48 சதவிகித ஊழியர்கள் COVID-19 தொற்றுநோய்க்குப் பிறகு குறைந்த பட்சம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு தொலைதூரத்தில் இருந்து பணிபுரியும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இது பெருந்தொற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் 30 சதவிகிதமாக இருந்தது.
ஒட்டுமொத்தமாக, வீட்டில் இருந்து அலுவலகப்பணியை மேற்கொள்பவர்கள் பெரும்பாலும் தகவல் தொழில்நுட்பத் துறைகளைச் சேர்ந்தவர்கள். தற்போதைய மாறும் காலகட்டமும், கொரொனாவின் அழுத்தமும், அதிகமான ஊழிய்ர்கள் வீட்டில் இருந்தே அலுவலகப் பணியை மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தை உருவாக்கியிருப்பதால், நோட்புக்குகள், டேப்லெட்டுகள் மற்றும் குரோம் சாதனங்களுக்கான தேவைகள் அதிகரித்துள்ளன.
"இந்த மாறிவரும் போக்கு , புதிய உத்திகளுடன், வணிக திட்டங்களை உருவாக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய பணிச்சூழலுக்கு தேவையான தொழில்நுட்ப சாதனங்கள் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் அதிக அளவிலான கணினிகளை இடமாற்றம் செய்யும்" என்று அட்வால் கூறினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக