Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 27 மே, 2020

மூத்த குடிமக்களுக்காக PMVVY திட்டத்தை அறிமுகப்படுத்திய LIC....

மூத்த குடிமக்களுக்காக புதுப்பிக்கப்பட்ட பி.எம்.வி.வி.ஒய் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது LIC...  

மூத்த குடிமக்களுக்காக புதுப்பிக்கப்பட்ட பி.எம்.வி.வி.ஒய் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது LIC இந்த பாலிசியின் வட்டி விகிதம் மற்றும் பிற விவரங்களை தெரிந்துக் கொள்வோம். 

60 வயதுக்கும் அதிகமான மூத்த குடிமக்களுக்காகஇந்திய அரசின் மானியத்துடன்,  பி.எம்.வி.வி.ஒய் திட்டத்தை எல்.ஐ.சி புதுப்பித்து வெளியிட்டுள்ளது. 10 ஆண்டு கால உறுதிப்படுத்தப்பட்ட வருவாய் திட்டமான ’பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜ்னா’ திட்டத்தின்   மாற்றியமைக்கப்பட்ட  திட்டம் இது.

முக்கிய சிறப்பம்சங்கள்:

பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா (பி.எம்.வி.வி.ஒய்) என்பது அரசு மானியத்துடன் மூத்த குடிமக்களுக்காக எல்.ஐ.சி செயல்படுத்தும் ஓய்வூதியத் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் மாதத்திற்கு  அதிகபட்சமாக 9,250 ரூபாய் ஓய்வூதியம் பெறலாம்.  இந்த பாலிசி எடுத்தவர்களுக்கு தீவிர உடல்நிலை கோளாறு ஏற்பட்டால், பாலிசி காலத்திற்கு முன்னதாகவே திட்டத்தில் இருந்து வெளியேறும் தெரிவும் கொடுக்கப்பட்டுள்ளது. 

மூத்த குடிமக்களுக்கான பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா ஓய்வூதிய திட்டத்தை நீட்டிப்பதாக அரசாங்கம் சமீபத்தில் அறிவித்தது. அரசாங்கத்தின் அறிவிப்புக்குப் பிறகு, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்.ஐ.சி) மாற்றியமைக்கப்பட்ட, பங்கேற்பு இல்லாத ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்களுக்கான திருத்தப்பட்ட ஓய்வூதிய விகிதத்துடன் பி.எம்.வி.வி.ஒய் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அரசின் இந்த திட்டத்தை செயல்படுத்த இந்தியாவின் எல்.ஐ.சி நிறுவனத்திற்கு மட்டுமே அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பி.எம்.வி.வி.ஒய் என்பது வேறு எந்த திட்டத்துடனும் இணைக்கப்படாத, பங்கேற்காத, அரசாங்கத்தால் மானியமாக வழங்கப்படும் திட்டமாகும். இந்த திட்டம் இன்று (மே 26) முதல் மூன்று நிதி ஆண்டுகளுக்கு அதாவது 2023 மார்ச் 31 வரை விற்பனை செய்யப்படும். இந்த திட்டத்தை வழக்கம்போல முகவர்களிடம் இருந்து நேரடியாகவோ அல்லது LIC-ன் www.licindia.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனிலோ வாங்கலாம்.

PMVVY கால வரையறை மற்றும் வட்டி விகிதம்:

பாலிசி காலம் 10 ஆண்டுகள் மற்றும் முதல் நிதியாண்டில் விற்கப்படும் பாலிசிகளுக்கு, அதாவது 2021 மார்ச் 31 வரை, இத்திட்டம் 7.40% p.a. என்ற வருமானத்தை  உறுதியளிக்கிறது. 10 வருட முழு காலத்திற்கும் செலுத்த வேண்டிய மாதாந்திரத் தொகையானது 7.66% p.a. க்கு சமமானதாக இருக்கும்.

அடுத்த இரண்டு நிதியாண்டுகளில் விற்கப்படும் பாலிசிகளுக்கானஉறுதிப்படுத்தப்பட்ட வட்டி விகிதம், ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும் நிதி அமைச்சகத்தால் மதிப்பாய்வு செய்யப்பட்டு முடிவு செய்யப்படும்.

PMVVY குறைந்தபட்ச, அதிகபட்ச ஓய்வூதியம்:

மூத்த குடிமக்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்த தொகையைப் பொறுத்து மாதத்திற்கு குறைந்தபட்சமாக 1,000 ரூபாயும், அதிகபட்சமாக மாதத்திற்கு 10,000 ரூபாயும் பெறலாம் என வரையறுக்கப்பட்டுள்ளது. அதாவது இதே திட்டத்தின் கீழ் இதற்கு முன்னதாக எடுக்கப்பட்ட அனைத்து பாலிசிகளையும் சேர்த்து மொத்தத் தொகை   15 லட்சம் ரூபாயைத் தாண்டக்கூடாது.


PMVVY கொள்முதல் விலை:

ஒரே முறை மொத்தமாக கட்டணம் செலுத்தியும் இந்த பாலிசையை வாங்க முடியும்.  பாலிசி எடுக்க விரும்புபவர் தான் பெற விரும்பு ஓய்வூதியத்தின் அளவு அல்லது பாலிசியின் மொத்த மதிப்பின் அடிப்படையில் தெரிவு செய்துக் கொள்ளலாம்.  பாலிசியை வாங்கும் போதே, ஓய்வூதியம் பெறுபவர் மாத / காலாண்டு / அரை ஆண்டு அல்லது வருடாந்திர ஓய்வூதிய முறையை தேர்வு செய்துக் கொள்ளலாம்.

குறைந்தபட்ச கொள்முதல் விலையானது, மாதாந்திர தெரிவின்கீழ் 1,62,162 ரூபாய். காலாண்டு தெரிவில் 1,61,074 ரூபாய். அரை ஆண்டு தெரிவில் 1,59,574 ரூபாய். ஆண்டு முறையை தெரிவு செய்தால் 1,56,658 ரூபாய் செலுத்த வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் ஒருவர் பெறக்கூடிய அதிகபட்ச ஓய்வூதியம் மாதத்திற்கு 9,250 ரூபாய், காலாண்டில் 27,750 ரூபாய், அரையாண்டுக்கு 55,500 ரூபாய் மற்றும் ஆண்டுக்கு 1,11,000 ரூபாய் ஆகும்.

பாலிசி காலத்தின் போது ஓய்வூதியதாரருக்கு ஓய்வூதியத் தொகையானது அவர் தெரிவு செய்தபடி, (மாதம் / காலாண்டு / அரையாண்டு / ஆண்டு)  செலுத்தப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக