Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 1 மே, 2020

தமிழகத்தில் 35வது பொருளாக கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு.!

கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பழனி பஞ்சாமிருதம், திண்டுக்கல் பூட்டு, திருநெல்வேலி அல்வா, காரைக்குடி கண்டாங்கி சேலை, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவ உள்ளிட்ட 34 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் கரிசல் மண்ணில் விளையும் வேர்க்கடலை மிகவும் ருசியானது பிரபலமானதும் கூட. இந்த வேர்க்கடலை கொண்டு உடன் பனைவெல்லபாகு, சுக்கு, ஏலக்காய் கலந்து இந்த வேர்க்கடலை தயாரிப்பதால் இந்த கடலைமிட்டாய்க்கு தனி ருசி உண்டு.

தற்போது 35 வது பொருளாக கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. கடலைமிட்டாய்க்கான புவிசார் குறியீட்டுக்காக கடந்த 2014-ஆம் ஆண்டு அப்போது தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியராக இருந்த விஜய்கார்த்திகேயன் விண்ணப்பித்திருந்தார்.

தற்போது கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால், கடலை மிட்டாய் தொழிலை நம்பி இருக்கும் 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், பத்தாயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பயன்பெறுவர். இனி போலியாக யாரும் கோவில்பட்டி கடலை மிட்டாய் என தயாரித்து விற்பனை செய்ய முடியாது. அப்படி விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக