சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளை ஒப்படைக்க சென்னை மாநகராட்சி உத்தரவு . மே 2ம் தேதிக்குள் ஒப்படைக்க ஆட்சியருக்கு சென்னை மாநகராட்சி மேயர் பிரகாஷ் உத்தரவு .
தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 2,323-ஆக உயர்ந்துள்ளது. அதில் தலைநகர் சென்னையில் இன்று மட்டுமே 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி கோரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 906-ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகமாகிக்கொண்டே வருகிறது. கடந்த 6 நாட்களில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்து உள்ளது. ஆதலால் தான், தற்போது மாநகராட்சி ஆணையரால் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக