ஸ்ரீபெரும்புதூர் அருகே வடமங்கலத்தில் வறுமையால் 3 குழந்தைகளை கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை எதிர்க்க முழு ஊரடங்கை அறிவித்தது இந்திய அரசு. இந்நிலையில் வறுமையால் கூலித்தொழிலாளி ஆறுமுகம் என்பவர் தனது 2 மகள், மற்றும் ஒரு மகனை கொன்று விட்டு , அவரும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இந்த தற்கொலையில் தனது மூன்று குழந்தைகளில் ஒருவரை வீட்டில் தூக்கிட்டும், மற்ற இரு குழந்தைகளை காலில் கல்லை கட்டி கிணற்றில் தள்ளியும் கொலை செய்து தானும் தற்கொலை செய்துள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே வடமங்கலம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஆறுமுகம், ஆறுமுகம் - கோவிந்தம்மாள் தம்பதிகளுக்கு ராஜேஸ்வரி, ஷாலினி மற்றும் சேதுராமன் என்கின்ற 3 குழந்தைகள் இருக்கின்றன. இந்நிலையில் இன்று அவரது மனைவி கோவிந்தம்மாள் வேலைக்கு சென்று மாலை வீட்டிற்கு திரும்பிய போது அவரது மகள் ராஜேஸ்வரி சடலமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த கூச்சலிட்ட அவர், அக்கம் பக்கத்தில் பார்த்தபோது அவரது கணவர் ஆறுமுகம் அருகே இருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதன் பின் தனது மேலும் 2 பிள்ளைகளை அனைவரும் தேடி இருக்கின்றனர். இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர், மேலும் 2 குழந்தைகளை கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தீவிரமாக தேடிக்கொண்டு வந்தனர். அப்போது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் தேடி பார்த்தபோது மீதமுள்ள 2 குழந்தைகளை கயிற்றில் கல்லை கட்டி தூக்கி கிணற்றில் வீசியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. அந்த 2 குழந்தைகளும் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை மட்டுமின்றி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக