Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 19 மே, 2020

அடுத்த வாரம் இந்தியாவில் களமிறங்கும் சாம்சங் ஃபிரேம் டிவி.!


சாம்சங் ஆர்ட் 

சாம்சங் நிறுவனம் அடுத்த வாரம் தனது ஃபிரேம் டிவி 2020 மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, மேலும் இதற்கான டீசர் பிளிப்கார்ட் தளத்தில் பிதவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ஃபிரேம் டிவி மாடல்களில் சாம்சங் ஆர்ட் ஸ்டோர் பிரீ-இன்ஸ்டார் செய்யப்படும், பின்பு இதனுடன் ஆப்பிள் ஏர்பிளே 2 வசதியும்
வழங்கப்படுகிறது. இந்தமுறை ஃபிரேம் டிவியில் மூன்று வௌ;வேறு அளவுகளில் வெளியிடப்படும் என பிளிப்கார்ட் டீசரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அமெரிக்காவிலும் ஃபிரேம் டிவி 202 சீரிசில் மொத்தம் ஆறு வெவ்வேறு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இவற்றில் 75-இன்ச் மாடல் பெரியதாக இருக்கிறது. பிளிப்கார்ட்-ன் தகவல் அடிப்படையில் சாம்சங் ஃபிரேம் டிவி 2020 மூன்று மாடல்களில் அறிமுகமாகிறது.
கடந்த 2018-ம் ஆண்டு சாம்சங் 55-இன்ச் ஃபிரேம் டிவி மாடலையும், கடந்த ஆண்டு 65-இன்ச் மாடலையும் அறிமுகம் செய்தது, அந்த வரிசையில் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்ட 75-இன்ச் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
குறிப்பாக இந்த சாம்சங் ஃபிரேம் டிவி 2020 மாடலில் ஆர்ட் மோட் வழங்கப்பட்டுள்ளது, இதை கொண்டு சாம்சங் ஆர்ட் ஸ்டோரில் இருந்து வரைபடங்கை டவுன்லோடு செய்துகொள்ள முடியம். பின்பு ஃபிரேம் டிவியில் கஸ்டமைஸ் செய்யக்கூடிய ஃபிரேம் மற்றும் குவாண்டம் டாட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்குமுன்பு அறிமுகம் செய்யப்பட்ட ஃபிரேம் ஸ்மார்ட் 7-இன்-1 32 இன்ச் எச்டி மற்றும் 40 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி டிவி, பிரேம் 55-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம். சாம்சங் 7இன்-1 டிவிகளில் ஆன்லைன் தரவுகளை பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. பின்பு இந்த ஸ்மார்ட் டிவிகள் QLED தொழில்நுட்பம் மற்றும் இன்-பில்ட் மோஷன் மற்றும் பிரைட்னஸ் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன.
தி ஃபிரேம் டிவி பயன்படுத்தாத சமயத்தில் ஆர்ட் மோடிற்கு சென்று கலை சார்ந்த புகைப்படங்களை திரையில் காண்பிக்கும் இத்துடன் டிவி வைக்கப்பட்டுள்ள அறையின் சூழலுக்கு ஏற்ப ஸ்கிரீன் பிரைட்நஸ் தானாக மாறும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
திஃபிரேம் டிவி மாடல்கள் பல்வேறு ஸ்மார்ட் சாதனங்களுடன் வயர்லெஸ் முறையில் இணைந்து கொண்டு ஸ்மார்ட் திங்ஸ் செயலி மற்றும்
ஒன் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்குகிறது. பின்பு பில்ட்-இன் ஏர்பிளே 2 வசதியும் வழங்கப்பட்டு ஆப்பிள் சாதனங்களில் இருக்கும் தரவுகளைம் டிவியில் பார்க்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக