ஆப்பிள்
நிறுவனம் சீனாவில் இருந்து இந்தியாவில் 40 பில்லியன் டாலர் மதிப்புள்ள
ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகரித்த வண்ணம்
கொரோனா
பாதிப்பு இந்தியாவில் அதிகரித்த வண்ணமே இருந்து வந்தாலும் அதற்கான
நடவடிக்கையும் எடுக்கப்பட்டு கொண்டே தான் வருகிறது. இந்தியாவில் கொரோனா
வைரஸ் பாதிப்பு 67,152ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் பலி எண்ணிக்கை 2,206ஆக
உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டிலேயே அதிகபட்சமாக
மகாராஷ்டிராவில் 22,171 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கடுத்த இடத்தில் குஜராத் 8,194 பேருக்கு மாநிலம் முழுவதும்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு
அதேபோல் தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அரசு பல்வேறு நடவடிக்கை
தமிழத்தில் நோய் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவர அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. சென்னையில் கடந்த சில தினங்களாக கொரோனா வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,002 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2000-த்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்த செய்தி ஆறுதல் தரும்விதமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.
உலகம் முழுவதும் 41 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு
உலகம் முழுவதும் 41 லட்சத்து 97 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 84 ஆயிரத்துத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை 13 லட்சத்து 68 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அங்கு 80 ஆயிரத்து 787 பேர் இறந்துள்ளனர். அதேபோல் தற்போதைய நிலைப்படி ரஷ்யாவில் கொரோனா அசுர வேகத்தில் பரவி வருகிறது.
பிரதான ஒன்று ஊரடங்கு நடவடிக்கை
கொரோனா வைரஸை தடுக்கு அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளில் பிரதான ஒன்று ஊரடங்கு நடவடிக்கை. இந்த ஊரடங்கில் பல நிறுவனங்களின் உற்பத்தி விகிதமும் விற்பனையும் முடங்கி கிடக்கிறது. இதில் உலகில் தனக்கென ஒரு சந்தையை உருவாக்கி வைத்துள்ள ஆப்பிள் நிறுவனமும் விதிவிலக்கு பெறவில்லை.
ஸ்மார்ட்போன்களை சீனாவிலும் உருவாக்கி வருகிறது
ஆப்பிள் நிறுவனம் தங்களது ஸ்மார்ட்போன்களை சீனாவிலும் உருவாக்கி வருகிறது. இந்த நிலையில் தற்போது உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா தொற்று சீனாவில் இருந்துதான் பரவத் தொடங்கியது என்பதால் பல்வேறு நிறுவனங்களும் சீனாவில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளது. இதையடுத்து உற்பத்தியை வேறு நாட்டில் மேற்கொள்ள நிறுவனங்கள் திட்டமிடுவது என்பது இந்தியாவில் தான்.
சீனாவில் இருந்து வெளியேறி இந்தியாவில் உருவாக்கத் திட்டம்
ஆப்பிள் நிறுவனமும் தற்போது சீனாவில் இருந்து வெளியேறி இந்தியாவில் உற்பத்தியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் ஐந்தில் ஒரு பகுதியை சீனாவில் தான் உற்பத்தி செய்து வந்தது. இதுகுறித்து ஆப்பிள் நிறுவன அதிகாரிகள் இந்தியா அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அதன் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மத்திய அரசு உள்நாட்டு உற்பத்தி
மேலும் இந்தியாவில் உற்பத்தியை மேற்கொள்ள மத்திய அரசு உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க சில சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகைகளை பயன்படுத்துக் கொள்ளவும் ஆப்பிள் ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது. ஆப்பிள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களான பாக்ஸ்கான், விஸ்ட்ரான் ஆகிய நிறுவனங்களின் மூலம் இந்தியாவில் 40 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்தியாவில் முதல் ஷோரூம்
அதேபோல் ஆப்பிள் நிறுவனங்களுக்கு இந்தியாவில் தற்போதுவரை ஷோரூம்கள் இல்லை என்ற நிலையில் இந்த உற்பத்தி மையம் ஆரம்பிக்கப்பட்டால் இந்தியாவில் முதல் ஷோரூம் ஆரம்பிக்கப்படும் என நிறுவன தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக