Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 6 மே, 2020

ஷார்ஜாவில் 47 மாடி கட்டிடத்தில் தீவிபத்து! 300 குடும்பங்கள் வெளியேற்றம்!

ஷார்ஜாவில் உள்ள 47 மாடி கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின், ஷார்ஜாவின் Al Nahda பகுதியில் அமைந்திருக்கும் Abbco Tower 47 மாடிகளைக் கொண்டது. இது தாஜ் பெங்களூரு ரெஸ்டாரண்ட்டுக்கு அடுத்ததாக இந்த கட்டிடம் அமைந்துள்ளது. 

 இந்நிலையில், ஷார்ஜாவில் உள்ள 47 மாடி கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் தான் அதிகமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இந்த கட்டிடத்தில், நேற்று இரவு 9 மணியளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அங்கிருந்து 300 குடும்பங்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், மினா தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த கட்டிடத்தில் இருந்து 300 குடும்பங்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட  நிலையில், 9  பேருக்கு மட்டும் சிறு, சிறு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!